சிம்சோனே, உன் பலம் எங்கே சென்றது? WHERE HAS THY STRENGTH GONE, SAMSON? 59-07-02 லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா, அமெரிக்கா. (சகோதரன் பிரன்ஹாமுக்காக, ஒரு சகோதரன் வேத வசனத்தை வாசிக்கிறார் ஆசி] "நியாயாதிபதிகள் 16-ம் அதிகாரத்தில் இருந்து 4-ம் வசனம் முதல் 22ஆம் வசனம் வாசிக்கையில் நீங்கள் உட்காரலாம். இது சிறிது நீளமான வரை. நான் இதை வேதவாக்கியம், ஆனால் சகோதரன் பிரன்ஹாம் இதை வாசிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்." அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம் பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி, சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள். அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. (அந்த சகோதரன், சகோதரன் பிரன்ஹாமை ஜனங்களிடம் அறிமுகம் செய்கிறார்) "சகோதரன் பிரன்ஹாம்." 2. இன்றிரவு இங்கிருப்பதும், மிகவும் தயவுள்ள இந்த கிறிஸ்தவ குழுவை சந்திப்பதற்கு கிடைத்த இந்த மகத்தான தருணமும் மிக அருமையாயுள்ளது. மேலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துதல்கள். நான் இங்கே தங்கியிருக்கின்ற இந்த நாட்கள் என்னுடைய ஜீவியத்திலேயே மிகவும் மகிமையான நாட்களில் சிலதாக இருக்கின்றது. இந்த காலை நான் செய்திருந்த ஒரு தவறை அறிக்கை செய்து கொண்டிருந்தபோது, ஊழியக்காரர்களும் வர்த்தகர்களும் ஒருவர் பின் ஒருவராக, அழுதவாறு என்னை சந்தித்து, அங்கே வெளியே சென்று ஜெபிக்கும்படிக்கு செய்தனர். எனவே அதை நான் விரும்புகிறேன். அறிக்கை செய்தல் இருக்கின்ற வரையில் எழுப்புதலுக்கான நம்பிக்கை உண்டு என்பதை அது காட்டுகின்றது இல்லையா? ஆகவே அதற்காக நாம் சந்தோஷமாயிருக்கிறோம். மேலும் இப்பொழுது, கடந்த இரவு நம்முடைய கனத்திற்குரிய சகோதரன் ராபர்ட்ஸ் தன்னுடைய செய்தியை சரியாக கிறிஸ்தவ வர்த்தகர்களுக்கு சென்றடையும்படியான ஒரு செய்தியை அளித்தார். ஆகவே நான் கூறவிருந்த சில வார்த்தைகளை இன்றிரவு சரியாக சபைக்குச் சென்றடையும்படியாக அளிக்கலாம் என்று எண்ணினேன். ஏனென் றால் இங்கு ஆதரவு அளிக்கின்ற அநேக ஊழியக்காரர்கள் இங்கே உள்ளனர், அதாவது கூட்டத்தில் இருக்கின்ற ஊழியக்காரர்கள். இன்றிரவு என்னுடைய பொருளானது, "சிம்சோனே, உன்னுடைய பலம் எங்கே சென்றது?' என்பதாகும். 3. ஜெபிப்பதற்காக ஒரு நிமிஷம் நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். அருமையான பரலோக பிதாவே, எங்கள் முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும். எங்களுக்குள்ளிருக்கும் எல்லாவற்றோடும் உம்மிடத்தில் வருகையில் உம்முடைய கிருபைக்காக வேண்டுகின்றோம். மேலும் உமக்குப் பிரியமில்லாத எதாவதொன்றை நாங்கள் செய்திருந்தாலோ, கூறியிருந்தாலோ அல்லது நினைத் திருந்தாலும், நீர் அவற்றை எங்களுக்கு மன்னித்தருளும் படியாக வேண்டிக்கொள்கிறோம்; ஏனென்றால் உம்முடைய நேச குமாரன் கர்த்தராகிய இயேசுவின் நீதியினால் சுற்றப்பட்டு. உமது ராஜ்யத்திற்குள் நாங்கள் வரவேற்கப்பட ஆயத்தமாய் என்றாவது ஒருநாள் உம்முடைய சமூகத்தில் நிற்க வேண்டும் என்று நாங்கள் மெய்யாகவே விரும்புகின்றோம். மேலும் இப்பொழுது, நாங்கள் தெளிவான சிந்தையுடன் இருக்கும்போதே எங்களுடைய சகல பாவங்களையும் மன்னிக்குமாறு கேட்கிறோம். எங்களுடைய ஜீவியத்தில் சீக்கிரமாக அழைக்கப்பட வேண்டிய ஒரு வேளை வரக்கூடும், அப்பொழுது மனந்திரும்ப நேரம் இராமல் போகும். கர்த்தாவே, வாசிக்கப்பட்ட அந்த வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவர் தாமே எடுத்து எங்களுக்குத் தேவையானதை எங்களுடைய இருதயங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு இன்றிரவு ஜெபிக்கிறோம். கர்த்தாவே இந்த விசேஷித்த கன்வென்ஷன் கூட்டத்தை நீர் தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம். பின்பு, பிரசங்கங்களிலும், சாட்சியிலும் தங்கள் இருதயங்களிலிருந்து உத்தமமாய்ப் பேசின, கனத்திற்குரிய, தீரமுள்ள, சிலுவையின் போர்ச்சேவகர்களுக்காகவும், மற்றும் கூறப்பட்டவை களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். அன்றியும் செய்து முடித்த எல்லாவற்றிற்காகவும் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம், அவற்றை நீர் தொடர்ந்து செய்யும்படியாக கேட்கிறோம். சகோதரன் ஷகாரியன் (Shakarian) அவர்களையும், கிறிஸ்தவ வர்த்தக குழுவினரையும் மற்றும் - மற்றும் இங்கு கூடியிருக்கும் ஒவ்வொரு ஊழியக்காரர்களையும் அமைப்புகளையும் ஆசீர்வதியும். மேற்குக்கரையோர பிரதேசங்களில் நடத்தப்பட்ட கன்வென்ஷன் கூட்டங்களில் ஒன்றாக இது அமைவதாக மகத்தான விசேஷித்த கர்த்தாவே, அடுத்த ஓரிரு நாட்களில் இங்கே ஏதோ ஒரு காரியமானது சம்பவிப்பதாக, அது தாமே இந்த முழு கலிஃபோர்னியா மாகாணத்தையும் எழுப்பி, அவர்களுக்கு ஒரு மனந்திரும்புதலையும், எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரட்சிப்பின் கிருபையைப் பற்றிய அறிவையும் அளிப்பதாக. பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்களை நடத்தும்படி நாங்கள் தொடர்ந்து காத்திருக்கையில் எங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பீராக இவற்றை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 4. சிம்சோன் என்னும் இந்த மனுஷன், பழைய ஏற்பாட்டில் எப்போதுமே ஒரு தலைச்சிறந்த சிறப்பியல்பு கொண்டிருந்த ஒருவன் ஆவான். நான் முதன்முதலில் பிரசங்கம் செய்ய முயற்சி செய்த பிரசங்க பாகம், "பராக்கிரமசாலியாகிய சிம்சோன்" என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஏனென்றால் நான் - நான் பலத்தை விரும்புவேன். சிம்சோன் பலத்தைக் கொண்டிருந்தான், கர்த்தருடைய பலத்தை கொண்டிருந்தான். அவன் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ஒரு பெரிய மகத்தான இராட்சதனாக இருந்தான் என்று நான் நம்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு பெரிய மனிதனானவன் பட்டணத்தின் வாசல் கதவுகளை மலைக்குச் சுமந்துகொண்டு போவதையோ அல்லது தன்னுடைய கைகளால் ஒரு சிங்கத்தை கொல்கின்றான் என்பதைக் காண்பது, தேவனுக்கு மகிமையாய் இராது. ஆனால் சிம்சோன் ஒரு மிகச் சிறிய குள்ளனாக இருந்தான் என்றே நான் நம்புகிறேன், ஒரு குள்ளன் என்று நாம் அழைக்கிறோமே, அப்படியாக ஒரு சிறிய அளவிலான மனிதனாக இருந்திருப்பான், அன்றியும் கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்த போதோ அங்கே தான் தேவன் மகிமையைப் பெற்றுக் கொண்டார். அவனுடைய சுய பலத்தால் அதைச் செய்ய இயலாது என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகையால் அது கர்த்தருடைய பலமாக இருக்க வேண்டியிருந்தது. தேவன் தம்முடைய தம்முடைய மகத்தான கிரியைகளைச் செய்யும்படி எளிமையான காரியங்களையே எடுத்துக் கொள்கிறார். மற்றும் அது வெறுமனே சாதாரணமான காரியங்களாகும்... நாம் சிலவேளைகளில் ஏதோ மகத்தான ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி செய்து, தேவன் உபயோகிக்க விரும்புகின்ற உண்மையான காரியத்தை கடந்து அதற்கு மேலாக சென்று விடுகிறோம். 5. மேலும் நான் கூறினவாறு, சிம்சோன் மற்றும் தெலீலாளை குறித்த சம்பவமானது, சபையைப் போன்றே ஒரு மகத்தான காரியமாகும். இன்றிரவு அவர்களை அவ்வாறே ஒப்பிட விரும்புகின்றேன். கர்த்தரைப் பின்பற்றியிருந்த வரையிலும் சிம்சோன் ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். அவன் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, தேவனுடன் நடந்த வரையிலும் தேவன் அவனை உபயோகப்படுத்தினார். அவர் சபைக்கும் அதையே தான் செய்தார். சபையானது தேவனுடன் நடந்து, தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளுகின்ற வரைக்குமாக தேவனால் சபையை உபயோகப்படுத்த முடியும். ஆனால் சபை சிம்சோன் செய்தது போல் வழி விலகிச்செல்லும்போது, தேவனால் சபையை உபயோகப்படுத்த முடியாது. அவர் கிரியை செய்யும்படி வேறு ஏதோவொன்றை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது, ஏனென்றால் அவருடைய கற்பனைகளில் உண்மையாய் நடக்கின்ற ஒரு சபையையோ அல்லது ஒரு அமைப்பையோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரையோ மட்டுமே அவரால் உபயோகிக்க முடியும். சிம்சோனும் மிகவும் நன்றாகத்தான் செயல்பட்டான். அவனுக்கு ஒரு நல்ல தொடக்கம் இருந்தது. அவன் சரசமாடத்தொடங்கும் (flirt) வரையில் அவன் சரியாக காரியத்தை செய்துகொண்டிருந்தான். அவன் சரசமாட் தொடங்கினபோதோ தொல்லைகளுக்குள்ளானான். அவனுடைய பின்மாற்றத்தின் முதல் படி (step) அது தான். இன்றிரவு நான் நம்புவது என்னவென்றால், சபை பின்மாற்றம் அடைவதன் முதல் படி என்னவாக இருக்கும் என்றால், அது அவிசுவாசியுடன் சரசமாட ஆரம்பிக்கும்போது தான் அந்த பின்மாற்றம் ஆரம்பிக்கின்றது. இந்த பெலிஸ்த ஸ்திரீ ஒரு அவிசுவாசியாயிருந்தாள். சிம்சோன் அவளுடைய சௌந்தரியத்தால் வசீகரிக்கப்பட்டான். சபையும் அப்பேற்பட்ட அநேக காரியங்களை செய்திருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் நினைப்பது என்னவென்றால் சபையானது அதை மிகப்பெரிய அளவில் செய்துள்ளது. அது உலகத்தால் கவர்ந்திழுக்கப்பட்டதால், அது தாமே உலத்தோடு சரசமாடி, உலகத்தின் மாதிரியின்படியே (pattern) தன்னை உலகத்துடன் ஒப்புமை படுத்திக்கொள்ள முயற்சித்துக் கொள்கின்றது என்பதேயாகும். 6. சிம்சோன் தவறான மக்கள் கூட்டத்துடன் கூட ஆரம்பித்தான். நீங்கள் கேடான மக்கள் கூட்டத்தினருடன் சகவாசத்தையு டையவர்களாய் இருக்கும்போது, கர்த்தருடைய சித்தத்திற்கு புறம்பாயிருக்கிறீர்கள் என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள். என் வயது முதிர்ந்த தெற்கத்திய தாயார் "நீ உண்ணிகள் (flcas) உள்ள நாயுடன் படுத்திருந்தாயானால், உண்ணிகளுடன்தான் எழுந்திருப்பாய்" என்று என்னிடம் கூறுவதுண்டு. அது சற்று கடுமையான சொல்வழக்குதான் என்றாலும், அதில் நிறைய நடைமுறை அர்த்தம் இருக்கின்றது. நீங்கள் உங்களை உலகத்தின் காரியங்களுடன் தொடர்புபடுத்திக் கொண்டே, கர்த்தருக்கு முன்பாக ஆவிக்குரியவர்களாகவும், தாழ்மை உடையவர்களாகவும் இருக்கும்படிக்கு உங்களால் எதிர்- எதிர்பார்க்கவே முடியாது. நீ உன்னுடைய நண்பர் கூட்டத்தால் அறிந்துகொள்ளப்படுகிறாய். "உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று நான் சொல்கிறேன்" என்று ஒரு பழமொழி உண்டு. அன்றியும் சபையானது உலகத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கும்போது, அது உலகத்தை விட மேலானது அல்ல. சிம்சோன் செய்த விதமாக அது சரசம் செய்யத் தொடங்கும்போது, அது பரிசுத்த ஆவியின் ஐக்கியத்திலிருந்து அகன்று விடுகின்றது. தேவனுடைய தொடர்பிலிருந்தும், மற்றும் தூதர்களிடமிருந்தும், தேவனுடைய உரிமை, சுதந்தரம் (heritage) என்பதாக இருக்கின்ற நிலையில் இருந்து அகன்று விடுகின்றது. 7. உலகம் அளிக்கக்கூடிய வெற்றியைக் காணும்படியாக, சபையானது எப்போது உலக காரியங்களுடன் ஒப்புமைப்படுத்தி அதை ஒரு மாதிரியாக ஆக்கிக்கொள்ள முயற்சி செய்ய ஆரம்பித்ததோ, அங்கே தான் சபை சரசம் செய்ய தொடங்கினது. மேலும் தேவன் நம்மை உலகத்துடன் இசைந்து நடக்க முயலும்படி ஒரு போதும் நியமிக்கவில்லை. நாம் உலகத்தைப் போல் புத்திகூர்மை வாய்ந்தவர்களாகவோ, சாதுரியமானவர் களாகவோ ஒருபோதும் இருப்பதில்லை. இவ்வுலகராஜ்யத்தின் பிள்ளைகள் ராஜ்யத்தின் பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிக புத்திமான்களாக இருக்கிறார்கள் என வேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சாமர்த்தியசாலிகள்: காயீன் மற்றும் ஆபேலின் காலம் முதலே அது அவ்வாறுதான் உள்ளது. 8. இப்பொழுது, நாம் அந்த பண்டைய பாணியிலான, பரிசுத்த ஆவியுடன் ஐக்கியம் கொள்ளுதலில் இருந்து விலகிச் செல்ல தொடங்கியிருக்கிறோம். நாம் சரசம் செய்ய தொடங்குகிறோம். நாம் செய்யத் தொடங்கிய ஒரு காரியம் என்னவென்றால், தேவன் துவக்க காலங்களில் சபையை உபயோகிக்கத் தொடங்கின போது, அவர்கள் செய்த முதலாவது காரியம் கத்தோலிக்க சபை என்னும் ஒரு சபையை ஸ்தாபித்தனர். ஒரு ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பானது மற்றொரு அமைப்பை சந்திக்கும் வண்ணமாக தனது எல்லைக் கோடுகளை வரைந்திருக்குமானால், எனக்கு அதற்கெதிராக ஒன்றுமில்லை. ஆனால் அது தனது சொந்த எல்லைக்குள்ளாக வைத்துக் கொண்டு, ஐக்கியம் இல்லாமல் இருக்கும்போது அது தவறாயிருக்கின்றது. ஆனால் சபையோ உலகத்தோடு தன்னை மாதிரிப்படுத்தி ஒப்புமைபடுத்திக் கொள்ள முயற்சி செய்யத் தொடங்கினது. அது கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தபோது சபைக்கு வரம்பிடப்பட்டு கட்டப்பட்டுவிட்டதென்று பிசாசு நினைத்திருக்க கூடும். ஆனால் "சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்." என்கிற அறைகூவல் வந்தபோது, அங்கே ஒரு மார்ட்டின் லூத்தர் எழும்பி எல்லாக்கயிறுகளையும் அறுத்துப் போட்டு, நீதிமானாக்கப்படுதலை பிரசங்கிக்கிறவராக முன்னே வந்தார். ஹும்ம். சபையினுடைய மறைக்கப்பட்ட வல்லமை அது அல்ல என்று பிசாசு பார்த்தான். 9. இப்பொழுது, கண்டுபிடிப்பது தான் தெலீலாளின் நோக்கமாயிருந்தது. அவனுடைய வல்லமையை அவள் அவனுடைய வல்லமையை கண்டுபிடித்த பின்பு, அங்கு தான் அவனை சீர்குலைத்து தகர்க்க முடியும். ஆகவே அதைத் தான் பிசாசானவன் சபைக்கு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றான், அது, அந்த இரகசிய வல்லமையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால் தேவன் மார்ட்டின் லூத்தரை எழுப்பியபோது கத்தோலிக்க கயிறுகள் அறுத்துப் போடப்பட்டன. அதன் பிறகு, அவள் மீண்டும் அவனைக் கட்டினாள். ஆனால் "பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்" என்கிற கூக்குரல் வந்தபோதோ, கிருபையின் இரண்டாவது கிரியையாகிய அந்த பரிசுத்தமாக்கப்படுதல் என்ற காரியத்துடன் ஜான் வெஸ்லி எழும்பி நின்றார். அது அந்த கயிற்றை அறுத்துப்போட்டது. அப்பொழுது, மீண்டுமாக அவர்கள் கட்டிப் போட்டனர். பின்பு "பெலிஸ்தர் என்மேல் - உன்மேல் வந்துவிட்டார்கள்" என்ற வேறொரு செய்தி வந்தது. அப்பொழுது பெந்தெகொஸ்தே கூட்டம் எழும்பியது. அது அந்த ஸ்தாபனங்களின் பிரிவினைகளால் கட்டு கட்டப்பட்ட கயிறுகளையும் பிறவற்றையும் உடைத்துப் போட்டது. மேலும் இப்பொழுது அவர்களும் கட்டிப்போடப்படுவதை நாம் காண்கிறோம். அது மிகவும் மோசமானது, ஆனால் அது தான் உண்மை. ஆகவே இப்பொழுது நாம் பெந்தெகொஸ்தே சபையில் காண்கின்றோம். உலகம் மற்றவற்றை கட்டிப் போட்டிருந்த அதே காரியத்தை கொண்டு தான் இப்பொழுது அது பெந்தெகொஸ்தே சபையை கட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. சரியாக அப்படியே செய்துகொண்டிருக்கிறது. 10. நாம் செய்ய முயற்சிக்கின்ற முதலாவது காரியம் என்னவென்றால், மற்ற ஜனங்கள் செய்வதைப் போன்றே பெரிய புறப்பகட்டு நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பிக்க முயற்சிப்பதேயாகும், நம்முடைய நம்முடைய பிரசங்கிமார் களையும், நம்முடைய போதகர்களையும், நம்முடைய மேய்ப்பர்களையும் எடுத்து அவர்களை தெய்வீக டாக்டர் பட்டங்கள் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வது. நமக்கு தெய்வீக டாக்டர் பட்டங்கள் பெற்றவர்கள் தேவையில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தான் நமக்கு தேவை...?...நமக்கு அப்படிப்பட்ட காரியங்கள் நம் மத்தியில் தேவையில்லை. ஆனால் அங்கே தான் அது சபையை கட்டிப்போட முயற்சி செய்கிறது. அதன்பின்பு, அவர்கள் செய்ய முற்படும் அடுத்த காரியம் என்னவெனில், சபையினுடைய தாழ்மையை, அதன் மனத்தாழ்மை விட்டு அகன்று விடுவது. மேலும் சிறந்த ஆடையை அணிந்த குழுவினரையோ அல்லது சிறந்த கல்வியறிவு பெற்ற கூட்டத்தையோ கொண்டுவருதல் நம்முடைய ஊழியக்காரர்களை வேத சபைக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி நிறைய கல்வியறிவை கற்கும்படி முயற்சிப்பது போன்றவை. அதை நீங்கள் செய்யும் போது, நீங்கள் சபையைத் திருடி அதை பரிசுத்த ஆவியின் வல்லமையினின்று அகன்று போகச் செய்து அதை கட்டி விடுகிறீர்கள். அது முற்றிலும் உண்மையாகும். 11. இப்பொழுது, ஆனாலும் அவர்கள் அதை செய்கிறார்கள் என்று காண்கிறோம். இதை நான் உங்களிடம் கூறட்டும். யாரோ ஒருவர், "முன்பு எங்களுடைய போதக... தேவனுக்கென்று நிஜமாகவே பக்தி வைராக்கியம் கொண்டிருந்த பிரசங்கியாக அவரை நாங்கள் கொண்டிருந்தபோது..." என்கிறார். தேவனால் அழைக்கப்பட்ட மனிதர்களுக்கு பதிலாக அவர்கள் வேத கல்லூரிகள் அவர்களை அழைக்கப்படும்படி விட்டுவிட்டார்கள், அவர்கள் பணத்திற்காக, சாப்பாட்டு சீட்டுக்காக (Meal Ticket), அல்லது ஒரு பெரிய ஆளாவதற்காகவோ அதற்குள் செல்கின்றனர். அது நம்முடைய கர்த்தரிடமிருந்து உண்மையாகவே எவ்வளவு வித்தியாசமாக உள்ளது. அவர் இந்த பூமியில் வந்த போது, நாம் யாவருக்கும் ஒரு முன்மாதிரியாக அவர் இருந்தார். அவர் ஒரு சேவை செய்கின்ற கர்த்தராக இருந்தார். இருப்பதிலேயே மிகவும் கீழான (lowest) ஒரு வேலையைச் செய்தார். ஒரு பாதத்தை கழுவுகின்ற அடிமையாக, ஒரு ஊழியக்காரனாக... பரலோகத்தின் தேவனாயிருந்தும், ஓர் ஊழியக்காரனானார். கீழானவர்களிலும் கீழானவரானார் (lowest of the low). இன்று, தேவன் ஒரு மனிதனை சிறிது ஆசீர்வதித்து அவனுக்கு ஒரு நல்ல சபையை கொடுக்கலாம். அவனோ பிறர் தனக்கு ஊழியம் செய்யும் வரைக்குமாக திருப்தி யடையாமல் இருக்கக்கூடும். அது ஒரு ஆவிக்குரிய வியாதியின் அடையாளத்தைக் காண்பிக்கின்றது. இயேசு திடனற்றவர்களுக்கே ஊழியம் செய்தார். ரபீ, டாக்டர், சங்கை, ரெவரெண்ட் ஆவதற்கு விழைபவர்கள்... ஓ அப்படிப்பட்ட, சுயநலமான, தேவபக்தியற்ற, பிசாசின் நாமங்கள்... நாம் சகோதரர்களாய் இருக்கிறோம். நாம் இந்த உலகத்திற்கு ரியவர்கள் அல்ல. ஆனால் ஜனங்கள் அதைத்தான் வாஞ்சிக்கின்றனர். அவர்கள் ஒரு கூட்டத்திற்கு அல்லது அதை போன்றவற்றிற்கு வரும்போது தங்கள் நெஞ்சை நிமிர்த்தியவாறு உள்ளே வருகின்றனர், நடந்து தொடர்ந்து செல்கின்றனர். மற்றும் அப்படிப்பட்ட ஆட்களுக்கு நீங்கள் மிக உயர்ந்த மரியாதையை கொடுக்க வேண்டியதாகயி ருக்கின்றது. நமக்கு ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மரியாதை தேவையில்லை. எனக்கு ஏதாவது மரியாதை வேண்டுமென்றால், அது உண்மையான மரியாதையை அளிக்கும் தேவனிடமிருந்தே வர விரும்புவேன். உங்களில் ஒருவர் மற்றவரிடம் இருந்து மேன்மையைத் தேடும்போது, நீங்கள் எப்படி விசுவாசத்தை கொண்டிருக்க முடியும்? அது விதையிலிருந்து சத்தை வெளியே - வெளியே எடுத்துப்போடுகின்றது. அது சபையினுடைய மறைவான வல்லமையை எடுத்துவிடுகின்றது. அது ஜனங்களிடமிருந்து அதை உறிஞ்சிவிடுகின்றது. நாம் உலகத்தைப் போல நடக்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம். 12 இப்பொழுது, இந்த காரியங்களுக்கெதிராக எனக்கு ஒன்றுமில்லை ஆனால் சிகரெட்டுகள், மற்றும் கோ-கோ-கோலாக்கள் என அழைக்கப் புகையிலை நிறுவனங்கள், படுபவை மற்றும் பிற கம்பெனிகள், பீர், மதுபானம், அவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக்கொள்கின்றன. அதினாலே அவை எங்கும் பரம்பி விரிவடைந்திருக்கின்றன. சரி, விரைவாகவே நாமும் அதை கைப்பற்ற முயல்கின்றோம். இப்பொழுது, அது... அதற்கு எதிராக நான் ஒன்றும் கூறவில்லை, ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்காக நாம் இங்கே இருக்கவில்லை. நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காகவே இங்கே இருக்கின்றோம்... ஹாட்டன்டாட் (Hottentot: ஓர் ஆப்பிரிக்க நாடோடி பழங்குடியினம் - தமிழாக்கியோன்) மனிதனுக்கு, எகிப்திய ஒரு இரவு என்கிற கதைகளைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அதைவிட குறைவான அளவு தேவனை அறிந்துள்ள அறிவுப்பூர்வமான ஜனங்களின் கூட்டமானது நம்மைச் சுற்றி அமர்ந்திருப்பதை உடையவர்களாக இருப்பது என்ன நன்மையை உண்டாக்கும்? தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்து, தேவனை தங்களுடைய இரட்சகராக அறிந்து பரிசுத்த ஆவிக்கு வழிவிட அறிந்திருக்கின்ற யாராவது ஒரு நபர்தான் நமக்குத் தேவையாயிருக்கின்றது. 13. நாம் ஒரு ஒரு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம், இன்று சபை எல்லாமே அப்படியாக இருக்கின்றது. அவர்கள் நம்முடைய ஊழியக்காரர்களை எடுத்து, அந்த ஊழியக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பை கொண்டிருக்கையில், அவர்களை எங்கோ இருக்கின்ற ஒரு மரித்த சரீரத்தை பதப்படுத்தி வைக்கின்ற எங்கோ ஒரு இடத்திற்கு அனுப்பி, அவர்களுக்குள் மரித்த சரீரத்திற்கிடும் ஒருவித சுகந்தவர்க்க திரவத்தை உள்ளே முழுவதுமாக அழுத்தி செலுத்துகின்றனர். வார்த்தையை பிரசங்கித்து ஜனங்களை பரிசுத்த வேதாகமத்தின் மீதும், பரிசுத்த ஆவியின் மேலுமுள்ள விசுவாசத்திற்குள் கொண்டுவருவதற்கு பதிலாக, ஜனங்களுக்கு போதிக்கும்படி அவர்களுக்கு ஒரு கூட்ட கோட்பாடுகளையும், மனோதத்துவத்தையும் கற்பிக்கிறார்கள்; அது அவர்கள் துவக்கத்தில் இருந்ததைவிட தேவனை விட்டு அதிக தூரத்திற்கு எடுத்துச் செல்கின்றது. நம்முடைய கல்வித் திட்டங்கள் சரியாக அதைத்தான் நமக்கு கொண்டு வந்துள்ளது..?...... தேவன் கல்வியினால் அறிந்து கொள்ளப்படுபவர் அல்ல. அவர் விஞ்ஞானத்தினாலும் அறிந்துகொள்ளப்படுபவர் அல்ல. அவர் எந்த ஒரு உலகத்தின் காரியங்களினாலும் அறிந்து கொள்ளப்படுபவர் அல்ல. அன்றியும் - இருந்தாலும்... நீங்கள் தேவனை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் மட்டும் தான், தேவன் அறிந்து கொள்ளப்படுகிறார். 14. அங்கே ஏதேன் தோட்டத்தில் ஒரு அறிவின் விருட்சம் இருந்தது, அந்த அறிவின் விருட்சத்தில் தான் மனுஷன் முழுவதுமாக தொங்கிக் கொண்டிருக்கின்றான், நினைவிருக்கட்டும், அந்த அறிவின் விருட்சத்தினடியில் நீங்கள் ஜீவித்துக்கொண்டிருந்து, அதிலிருந்து விழும் கனியைப் புசித்து கொண்டிருக்கும் வரையிலும் நீங்கள் ஜீவவிருட்சத்திடமிருந்து தூரமாக புறம்பாக உள்ளீர்கள். ஒரே நேரத்தில் உங்களால் அந்த இரண்டு இடத்திலும் இருக்க இயலாது. நீங்கள் புத்திகூர்மையுடைய மிகப்பெரிய மனிதர்களையும் (அது உண்மைதான்) மற்றும் மகத்தான தத்துவ ஞானிகளையும் உருவாக்குகிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட தத்துவஞானிகள் நமக்கு தேவையில்லை. சபையில் இருக்கின்ற நமக்கு தாழ்மையான, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்தான் தேவை. ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்களுடைய ஊழியக்காரர்களை இன்னும் சிறிது உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் படி கல்வியைப் புகட்ட முயற்சிப்பதையும், இன்னும் கொஞ்சம் புத்திகூர்மையான கூட்டத்தை சபைக்குள்ளே கொண்டுவருவதையும் அது எனக்கு நினைப்பூட்டுகின்றது. பெந்தெகொஸ்தே ஜனங்கள் இப்பொழுது மிகச் சிறந்த கட்டிடங்களை கட்டுகின்றனர். அவற்றுள் சில பல லட்சம் டாலர்கள் மதிப்புடையவை. மேலும் கர்த்தர் மிகச் சீக்கிரமாக வருகிறார் என்றும் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது எந்த விதமான ஒரு அர்த்தத்தையும் எனக்கு காண்பிக்கவில்லை. பாருங்கள்? அவர்கள் ஏன் அதைச் செய்கின்றனர் ஏனென்றால் உலகம் அவ்வாறு செய்கின்றது என்பதனால் தான், மற்றெல்லாரும் அதைச் செய்கின்றனர் என்பதனால் ஏனைய மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதைக்குறித்து நமக்கு அக்கறை இல்லை. தேவனுக்கு முன்பாக சரியாக ஜீவித்தல்: அது தான் பிரதானமான காரியம். 15. ஆனால் ஏதேன் தோட்டத்தில், பிசாசு மனுஷனுடைய தலையை தெரிந்து கொண்டான். தேவனோ அவனுடைய இருதயத்தை தெரிந்து கொண்டார். இப்பொழுது, பிசாசு புத்திகூர்மையானவர்களிடத்தில் வந்து அவனுடைய மதபோதனையை புத்தி கூர்மையானவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கிறான். புத்திகூர்மையின் மூலம் நீங்கள் தேவனை அறிய ஒருபோதும் அறிய முடியாது. நீங்கள் அவரை ஒரு புதிதான பிறப்பினால், இருதயத்திலிருந்து வருகின்ற மறுபடியும் பிறந்தவர்களாக இருப்பதன் மூலமே அறிய வேண்டும். ஜீவனத்தின் பெருமை. மாம்சத்தின் இச்சை, என்னவெல்லாம் கண்ணால் காணக்கூடியவைகளோ... ஆனால் தேவன் உள்ளே வரும்போது, அவர் மனுஷனுடைய இருதயத்திற்குள் சென்று, அவன் தனது கண்களால் காணக்கூடாத காரியங்களை விசுவாசத்தினால் நம்பும்படி செய்கிறார். "ஏனென்றால் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சய முமாயிருக்கிறது." பிசாசு அதை வேறுவிதமாய் மாற்றிப் போட்டுவிட்டான். அவன் அதை பெந்தெகொஸ்தே சபைகளுக்கு செய்து கொண்டிருக்கிறான். மற்ற சபைகளை வீழ்த்தி அவைகளை கட்டப்பட்ட நிலைக்கு ஆளாக்கின அதே நிலைமைக்குள்ளாக ஸ்தாபன சபைகள் ஒவ்வொரு வருடமும் விழுந்து கொண்டிருப்பதை நான் காண்கின்றேன். அது முற்றிலும் உண்மையாகும். நாம் `கேட்பதெல்லாம் அறிவுக்கூர்மை, அறிவுக்கூர்மை அறிவு. அவ்வளவுதான். மேலும் அதிகமாக புத்திக்கூர்மையை அவர்கள் பெறும்போது, அவர்கள் இன்னும் சிறப்பாக பேசமுடியும், சிறந்த கல்வியை உபயோகிக்க முடியும், மனோதத்துவத்தை பேச முடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். அவர்கள் அதைச் செய்யும் போதோ, அவர்கள் தேவனுடைய பரிசுத்த வேதத்திலிருந்து ஜனங்களை அகற்றி கொண்டு சென்று விடுகின்றனர். அவர்களை ஜீவன் மற்றும் விசுவாசத்திலிருந்து அகற்றி விடுகின்றனர். 16. இப்பொழுது, சிறிது காலம் முன்பு நான் இங்கே லாஸ்ஏஞ்சல் வாசித்துக்கொண்டிருந்த ஒரு சிறு புஸ்த்தகத்தை சற்று ஞாபகப்படுத்துகின்றது. நீங்கள்... இதை அவபக்தியாய் இருக்கும்படி நான் கூறவில்லை. ஆனால் அது சற்றே என் நினைவுக்கு வந்தது. அது சிறிது - சிறு நல்ல நபர் உணர்வு அதாவது நகைச்சுவை உணர்வு உள்ளது என்று கூறவந்தேன். ஆனால் அது இதைப்போன்ற ஒன்றாகத்தான் இருந்தது: ஒரு குறிப்பிட்ட கோழிக்கூடு ஒன்று அங்கே இருந்தது. ஒரு பிரகாசமான கண்களை உடைய ஒரு சிறு சேவல் ஒரு நாள் காலை ஒரு பெட்டியின் மீது தாவிக்குதித்து அதனுடைய சிறிய அலகினால் அந்த கொத்தியவாறு, "இந்த பெட்டியை சீமான்களே. சீமாட்டிகளே, நான் "இந்த கோழிக்கோட்டில் வசிக்கும் நான்கைந்து முறை அறிவுகூர்மையை உங்களுக்கு கூறும்படியாக, இன்று காலை உங்களுக்கு ஒரு நான் அதிகமான பெற்றுக்கொண்டுள்ளேன் என்று சொற்பொழிவை அளிக்க விரும்புகிறேன். என்றது, அது கூறினது, "இதை சிறப்பாக எப்படி நடத்தவேண்டுமென்றும், அழகான இறகுகளை உண்டு பண்ணுவதற்கு, நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது அனைத்தும் எனக்கு தெரியும்.' அந்த எல்லா கோழிக்குஞ்சுகளும், அவைகளுடைய சிறு கொண்டைகளை சாய்த்தவாறு, "அவன் அழகாய் இருக்கிறான், இல்லையா?" என்று கொக்கரித்தனவாம். சரி, அது எனக்கு இந்த வேதாகம கல்லூரி பிரசங்கிகள் சிலரை நினைவு படுத்துகிறது. பின்பு முதலாவது காரியம் உங்களுக்கு தெரியுமா, அது முன்னே சென்று, "நமக்கு நேர்த்தியான இறகுகள் வளருவதற்கு தேவையான சரியான வகை வைட்டமின்கள் என்னவென்றும், மற்றும் நம்முடைய இந்த இடத்தை இன்னும் வாழ்வதற்கு சிறப்பான இடமாக மாற்ற எப்படி நாம் சரியான விதமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் நான் அறிவேன்." என்றது. மேலும் அந்த சிறிய சேவல் சரியாக சொற்பொழிவின் பாதியில் இருக்கும் போது, சிறிது தனது குறைவான இறகுகளையுடைய ஒரு சேவல் கோழிக்கூண்டின் வெளியே இருந்து ஓடி வந்தது, அது, அந்த "மகனே, சற்றே ஒரு நிமிஷம்." அது, "நான் இப்போதுதான் சமீபத்திய கடைசி செய்தி அறிக்கையை கேட்டேன்: கோழிகளின் விலை ஒரு பவுண்டுக்கு நான்கு சென்ட்டுகள் ஏறிவிட்டது. அதனால் நாம் எல்லோருமே நாளைக்கு இறைச்சிக் கடைக்கு செல்லப் போகிறோம்." என்றதாம். ஆகையால் உங்களுடைய அறிவு என்ன நன்மையை உண்டாக்குகிறது. நீங்கள் தேவனுடன் சரியாக இருப்பதே தான் நல்லதாகும். அதுவே பிரதானமான காரியம், 17. ஒரு சிறு கேனரி குருவி (Canary: ஒருவகை மஞ்சள் நிற சிறு குருவியினம் - தமிழாக்கியோன்) அதன் கூட்டின் மீது ஏறி அமர்ந்து, "நம்முடைய இந்த சிறு ஸ்தாபனத்திலேயே நான் சாமர்த்தியமான மனிதர்களை குறித்து முழுவதும் அறியும் வண்ணம் நான் குருவிகளில் ஒருவனாவேன். அவ்வளவு அதிகமான அறிவுகூர்மையை பெற்றிருக்கிறேன். அவர்கள் நம்மை விட மேலானவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால் எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியும்." என்றது. ஏறக்குறைய அதே நேரத்தில் பர்டியூ பல்கலைக்கழகத்தின் (Purdue) ஒரு பேராசிரியர் எழுந்து, "முக்கியமில்லாத சிறு பிராணியே, நீ` என்றவாறு சில மகத்தான வார்த்தைகளை பேச தொடங்கினார். அதை அந்த சிறு கேனரி குருவி அதன் கண்களை சிமிட்டியவாறு பார்த்தது. நிச்சயமாகவே அவர் எதைப் பற்றிப் பேசினார். என்பதை அது அறிந்து கொள்ளவில்லை. மேலும் அவர் அந்த கேனரி குருவிடம் பேசத் தொடங்கினார், இப்பொழுது அந்த குருவியினால் பார்க்க முடியாது என்பதனால் அல்ல, அதற்குக் கண்கள் இருந்தன. அதனால் கேட்க இயலாது என்பதனாலல்ல. ஏனென்றால் அதற்கு காதுகள் இருந்தன. ஆனால் அதனால் புரிந்து கொள்ள முடியாததின் காரணம் என்னவென்றால், அதற்கு ஒரு கேனரி குருவியின் மூளைதான் இருந்தது, ஆகையால் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது, நம்முடைய அநேக வேதாகமக் கல்லூரி போதனைகளும், மற்றும் அறிவுகூர்மையும் விதமாகத்தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன், அதே அவைகள் கேனரி கொண்டுள்ளன. குருவியின் மூளையை நிறைய அறிவின் மூலம் புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் அது தேவனுடைய இரகசியங்களை நாம் பரிசுத்த ஆவியால் மாத்திரமே வெளிப்படுத்தப்படுகின்றது, அது எப்படி வெளிப்படுத்து கின்றதோ அந்த விதமாகத் தான் இருக்கும். இன்றைக்கு கேனரி பறவை மூளை பிரசங்கங்கள் தான் மிக அதிகமாக இருக்கின்றன; அவர்கள் அதைக்குறித்து தாங்கள் அறிந்திருக்குக்கின்ற எல்லாவற்றையும் பேசுகின்றனர், ஆனால் நாம் காண்பதென்னவென்றால் உங்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்பதை கண்டுகொள்ளலாம். ஏனென்றால் நம்முடைய சிறிதான, எல்லைகள் கொண்டுள்ள சிந்தைகளானது எங்ஙனம் சர்வவல்லமையுடைய தேவனுடைய முடிவில்லாத சிந்தையை புரிந்து கொள்ளமுடியும்? நாம் எவ்வாறு அவ்விதமாக நமக்கு குழுக்களை உண்டாக்கி கொள்கிறோம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜனங்கள் அமைப்புகளை உண்டாக்கி கொண்டும், இப்படிப்பட்ட காரியங்களை செய்வதும், ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியைக். காண்பதற்காக விரைவாகவே ஆராதனை முடிக்கப்பட்டு மக்கள் வெளியே அனுப்படுகின்ற காரியங்களும், எனக்கு ஒரு காரியத்தையே சொல்கின்றது. அவர்கள் தேவனை அறியாமல், புதிய பிறப்பிற்கு பதிலாக, வேறு ஏதோ ஒரு பதில் ஈடுகளை, மாற்றுவஸ்துவைக் முயற்சிக்கின்றனர். அதைத்தான் அவர்கள் தவிர்த்து விலகி கொண்டிருக்க செல்கின்றனர். 18. வேதாகமம் புதிய பிறப்பை போதிக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்களோ, புதிய பிறப்பிற்கு பதிலாக கைகுலுக்குதலையும், பிற எல்லாவற்றையும் மாற்று காரியங்கள் ஆக்கிக்கொண்டனர். அது ஒரு அனுபவமாக இருக்கவேண்டும், அது மறுபடியும் பிறந்த ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிறப்புமே அருவருப்பான, அலங்கோலமாக காட்சியளிக்கின்ற ஒரு காரியம் என்று நமக்குத் தெரியும். ஒரு குழந்தை பிறக்கும் போது, அது தரையின் மீதாயிருந்தாலும், உமிக்குமியலின் மேலாயிருந்தாலும், இளஞ்சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட மருத்துவமனை அல்லது ஒரு அறையில் இருந்தாலும் சரி, அது ஒரு அலங்கோலமான காரியமே ஆகும். ஆனால் அது ஜீவனைக் கொண்டு வருகின்றது. புதிய பிறப்பு அருவருப்பான, அலங்கோலமாக காட்சியளித்தாலும் கூட, என்றால் அது தான். அது ஜீவனைக் கொண்டு வருகின்றதா யிருக்கிறது. அது ஒரு நவநாகரீக பாணியோ அல்லது பாவித்துக்கொள்வதோ அல்லது கோட்பாடுகளின் அறிக்கையோ அல்ல; அது பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகும், உண்மையாக விசுவாசிக்கின்ற சபையினுடைய இரகசியமும் அதுதான்: மறுபடியும் பிறத்தல். ஓ, நீங்கள் பீடத்திலிருந்து எழுந்து, பூ - ஊ ஊ ஊ என்று கதறி சத்தமிட்டு அழுது, உமிழ் நீர் வடிந்தவாறும், கூக்குரலிடவும் செய்வீர்கள் என்று நான் அறிவேன்; ஆனால் அது ஜீவனைக் கொண்டு வருகின்றது. அது உங்களை இளைத்துப்போகச் செய்துவிடும். அது உங்களை நீங்கள் இருக்க வேண்டிய அந்த நிலைக்கு மாற்றுகிறது. அதிலிருந்தும் உலகத்தையும், வணங்காக்கழுத்தையும் வெளியே அகற்றி விடுகின்றது. இன்றைக்கோ, நாம் வெறுமனே நடந்து சென்று, "நான் இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்." என்கிறோம். புருஷர்களும் ஸ்திரீகளும் பீடத்தண்டையில் வந்து, தாங்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும், யார் அவர்களை சுற்றி இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, அவர்கள் முழுவதுமாக மரித்துப்போய் மறுபடியும் பிறக்கின்ற அந்த புதிய பிறப்பின் ஸ்தானத்தை அது ஒருபோதும் எடுத்துக் கொள்ளவே முடியாது. முழு இரவு ஜெபக்கூட்டங்களும், பரிசுத்த ஆவியின் வல்லமையும் சபைக்குள்ளே மீண்டும் வரவேண்டும், இன்று நமக்குத் தேவை எதுவென்றால், ஒரு நல்ல அருமையான பழங்கால பரிசுத்த பவுலினுடைய எழுப்புதலும் மற்றும் வேதாகம பரிசுத்த ஆவியானது மறுபடியுமாக வல்லமையோடு பிரசங்கிக்கப் படுதலாகும், ஆம் உயிர்த்தெழுதலின் வல்லமையுடன் இருக்கின்ற எளிமையான பிரசங்கித்தல் ஆகும். அந்த மகத்தான அப்போஸ்தலன் பவுல், "உங்களுடைய உங்களுடைய விசுவாசம் மனுஷருடைய ஞானத்தில் நிற்காதபடிக்கு, நான் உங்களிடத்தில் ஞானத்திற்குரிய வசனிப்போடே வராமல், ஆவியின் பெலத்தினால் நிற்கும்படிக்கு, பரிசுத்த ஆவியின் உங்கள் விசுவாசம் பரிசுத்த பெலத்தை பிரசங்கிக்கிறவனாக வருகிறேன்.' சபைக்கு அதுதான் இன்று தேவைப்படுகின்றது. நாம் அதற்கு பதிலாக வேறு காரியங்களை மாற்றிக்கொண்டு, மேட்டிமைய என்றான். டைந்து, ஆசாரமான, விரைப்படைந்தவர்களாகும்போது, நாம் அந்த இரகசியத்தையே இழந்து விடுகிறோம். நம்முடைய ஜடைகளும் சிரைக்கப் படுகின்றன. அது முற்றிலும் சரி. 19. ஓ, அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெலீலாள் அறிந்திருந்தாள். அவள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தாள். மற்றொரு நாள், கடந்த சனிக்கிழமையன்று. நானும் என் மனைவியும் சில உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக மளிகைக்கடைக்கு சென்றிருந்தோம். நான் இதை குறை கூறிக்கொண்டே இருக்கும்படியாக சொல்லவில்லை. நான் இதற்கு ஒரு கடுமையான பெயரை உடையவனாய் இருக்கிறேன் என்பதை அறிவேன், ஆனால் தவறாக இருக்குமானால் அது தவறு தான். காரியங்கள் தவறாக இருக்கும் போது நீங்கள் எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? சபையில் இன்று காணப்படும் காரியம் என்ன, அது மிகவும் பெண்மைத்தன்மை உடையதாகிவிட்டது. தேவன் ஒரு பெண்மைத்தன்மை கொண்டவரல்ல. தேவன், தேவனாக இருக்கிறார். எங்களுடைய சிறிய நகரத்திற்கு செல்லும் வழியில், நாங்கள் குறைந்தது இருநூறு ஸ்திரீகளையாவது கடந்து சென்றிருப்போம் என யூகிக்கிறேன், அவர்களில் பாவாடை (skirt) அணிந்து இருந்த ஒரே ஒரு ஸ்திரீயை மட்டுமே கண்டோம். மற்ற ஸ்திரீகள் அனைவரும் சிறிய பழைய ஒழுக்கக்கேடான உடையை அணிந்திருந்தனர். மேலும் என்னுடைய மனைவி என்னிடம் சொன்னாள், அவள், "பில்லி, அந்த ஸ்திரீ தான் நிர்வாணமாயிருப்பதை அறியவில்லை என்று நீர் கூற முனைகிறீரா?" என்றாள். மேலும், "அவள் அதை அறியாமலிருக்கிறாள் என்றால், அப்படியானால் அவள் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறாள்; அவள் பித்துப்பிடித்தவள்." என்றாள். அது சரி. அதற்கு நான் கூறினேன்... நான், "தேனே, இல்லை, அவள் வெறுமனே ஒரு அமெரிக்க ஸ்திரீயாக இருக்கிறாள். அவள் அமெரிக்க வழக்கத்தை மாத்திரம் பின்பற்றுகிறாள்." என்றேன். அதற்கு அவள், "ஆனால் பாருங்கள், அந்த பெண்மணிக்கு, தான் செய்வது இன்னதென்று தெரியாது என்று நீர் என்னிடம் சொல்லுகிறீரா..." என்றாள். நான், "இல்லை, அவளுக்கு தெரியாது அவள் தனக்குள் வெறுமனே பெற்றிருக்கிறாள்." என்றேன். மேலும் நான் சொன்னேன், அமெரிக்க ஆவியை "நான் ஃபின்லாந்தில் இருந்தபோது, அந்த இடங்களில் ஒன்றிற்கு என்னை அழைத்து சென்றனர்." ஃபின்லாந்து காரர்கள் யாராவது இங்கே அமர்ந்திருப்பார்கள் ஆனால் நான் இந்த வார்த்தையை ஒருவேளை சரியாக உச்சரிக்காமல் இருக்கலாம்: சௌனா (Sauna: ஒருவகை நீராவிக்குளியல் தமிழாக்கியோன்) அது ஒருவித ஃபின்லாந்து குளியல். நான் அந்த இடத்தை சென்றடைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் என்னிடம் அங்கே உள்ளே செல்ல வேண்டாம் என்றார். அப்போது. ஆண்களை தேய்த்துக் கழுவதற்கு அவர்கள் பெண்களை நியமித்திருந்தனர் என்று கண்டு கொண்டேன். எனவே நான் டாக்டர் மானினெனிடம் (Manninen), "அது சரியான காரியம் என்று நீர் நினைக்கின்றீரா?" என்று கேட்டேன். அவர் அதற்கு, "உங்களுடைய அமெரிக்க மருத்துவர்கள் ஸ்திரீகளை மேசையின் மேல் கிடத்தி அவர்களின் ஆடையை களைந்து பரிசோதிப்பது எப்படி சரியோ, அதே போன்று இதுவும் சரிதான்" என்றார். ஆகையால் பார்த்தாயா, "பெண் வாத்துக்கறியுடன் சாப்பிட தரப்படும் குழம்புதான், ஆண் வாத்துக்கறியுடன் சேர்த்து சாப்பிடவும் தாப்படும்" (ஒரு ஆங்கில பழமொழி தமிழாக்கியோன்). பாருங்கள்? பானை கெண்டியைப் பார்த்து கருப்பு என்று கூற முடியாது. நீங்கள் ஃபிரான்ஸ் நாட்டிற்கு செல்வீர்களானால், அங்கே ஆண்கள், மற்றும் பெண்கள் அனைவரும் ஒரே பொது கழிவறையை பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஆப்பிரிக்காவிற்கு செல்லும்போது, காடுகளுக்குள், இருளான பகுதிகளுக்குள் அவர்கள் எந்த உடையும் பயன்படுத்துவதில்லை-அணிவதே யில்லை. ஆனால் காரியம் இதுதான்: அது அந்த தேசத்தின் பழக்கவழக்கங்களாகும். அதற்கு என் மனைவி, "அப்படியென்றால் நாம் அமெரிக்கர்கள் இல்லையா?" என்றாள். நான், "இல்லை, ஏனென்றால் நாம் வேறு ஒரு தேசத்திலிருந்து வந்துள்ளோம். இங்கே நாம் அந்நியர்களும் பரதேசிகளு மாயிருக்கிறோம். வரப்போகும் ஒரு நகரத்தை நாடித் தேடிக் கொண்டிருக்கிறோம். கூறினேன், "ஏனென்றால் நாம் பிறந்திருப்பது... நம்முடைய என்றேன். நான் ஆவி வேறொரு தேசத்திலிருந்து வருகின்றது, அது பரலோகம் ஆகும். அங்கே பரிசுத்தமும், தேவனும், நீதியும் துரைத்தனம் பண்ணி அரசாளுகின்றது. அன்றியும் நாம் அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கை செய்கிறோம். தேவன் தாமே கட்டி உண்டாக்கின ஒரு நகரத்திற்காக நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். 20. நாம் உலகத்தினுடைய இப்படிப்பட்ட காரியங்களை நோக்கிப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய ஆவி ஒரு நபருக்குள் வரும்போது, அது அவர்களை மாற்றுகின்றது. அது உங்களை ஊக்குவிக்கின்றது... உங்களுக்குள்ளிருக்கும் அந்த ஜீவன் உங்களை ஊக்கு விக்கின்றது. மேலும் சபையில் இன்று காணப்படும் கரியம் அது மிகவும் உலகப்பிரகாரமானதாகி விட்டது. மனுஷனுக்குள், இருதயத்துக்குள்ளே, பரிசுத்த ஆவி தான் நமக்கு தேவைப் படுகின்றது. புதிய பிறப்புதான் அதைச் செய்யும்: அந்த நபரை மாற்றி, அவனை அல்லது அவனை ஒரு புது சிருஷ்டியாக்குகின்றது. ஆப்பிரிக்காவின் மிகவும் உள்ளான இடங்களில் தாங்கள் இவ்வுலகில் வந்தபோது இருந்த விதமாகலே பிறந்த மேனியோடு நின்று கொண்டிருந்த பரிசுத்த ஆவி அவர்கள் மீது வந்தபோதோ, தங்களுடைய நிர்வாணத்தை மறைக்கும்படி ஆடைகளை கண்டடையும் மட்டும், அவர்கள் தங்கள் கைகளை மடக்கியவாறு விலகி நடந்து சென்றனர். மேலும், நம்மை நாகரீகமானவர்கள் என்று அவர்கள் அழைக்கிறார்களே ஆனால் நாமோ ஒவ்வொரு வருஷமும் இன்னும் அதிகமான ஆடைகளை களைந்து போட்டு, பரிசுத்த ஆவியை பெற்றுள்ளோம் என்று உரிமையும் கோருகிறோம். பரிசுத்த ஆவி ஒருவன் மேல் ஒரு விதமாகவும் மற்றவர் மேல் வேறு விதமாகவும் கிரியை செய்யாது. ஆனால் நான் ஒன்றைக் கூறட்டும், அமெரிக்காவானாலும், ஃபின்லாந்தானாலும், ஃபிரான்ஸ் அல்லது எங்காயிருப்பினும் ஒரு ஸ்திரியோ அல்லது புருஷனோ தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கும்போது அவன் ஒரு புது சிருஷ்டியாக மாறி, உலகத்தின் காரியங்களை நிறுத்தி விடுகிறான். அவனுக்கு அசை மரித்தவைகளாகின்றன. ஏனென்றால் அவன் மரித்து, அவனுடைய ஜீவன் கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளது. ஒரு எழுப்புதல், ஒரு அசைவு பரிசுத்த ஆவியினால் உண்டாக்குகின்ற, ஒரு பழைய பாணியிலான் பெந்தெ கொஸ்தே எழுப்புதல் தான் இன்று நமக்கு தேவையாயுள்ளது. தேவ ஆவியானவர் நம்மிடமிருந்து துக்கப்பட்டு விலகிச் செல்லும்படி இந்த பெரிய பிணவறைகளில் ஜிவிப்பதை விட ஒரு டாம்பரின்கள், கஞ்சிராவுடன், மூலையில் டாம்பரின்களை தட்டிக் கொண்டிருப்பது நமக்கு அதிக நன்மையாயிருக்கும். பிசாசு வந்து திருடி எடுத்துச் செல்ல வருகிறான் அதை எப்பவு செய்வது என்பதெல்லாய் அவனுக்குத் தெரியும். 21. இராஜாக்கள்... இஸ்ரவேல், அவர்கள் முதலாவது பின்மாற்றமடையஞ் தொடங்கியபோது அது என்ன செய்தது? அவர்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது, பரலோகத்தின் ராஜாவால் வழி நடத்தப்பட்டனர் தேவ அவர்களுக்கு ராஜாவாக இருந்தார். அவர்களுடைய பெலத்தின் இரகசியம் அதுதான். அதுவே அவர்களுடைய ஜெயத்தின் வெற்றியின் இரகசியமாயிருந்தது. ஏனென்றால் தேவன் அவர்களுடைய ராஜாவாக இருந்தார். ஆனால் அவர்கள் குடியேறி இனைப்பாறு தொடங்கியபோதோ என்ன செய்தனர்? அது பெந்தெகொஸ்தே சபைக்கு மாதிரியாக உள்ளது. அநேக ஆண்டுகளுக்கு முன், தேவன் நம்முடைய ராஜாவாக இருந்தபோது நாம் ஜெபக்கூட்டத்திற்கு வருகையில், தேவனுடைய வல்லமை நம்மேல் விழுந்து, நாம் சத்தமிட்டு சுற்றி குதித்தோம். நாம்- நாம் வெட்கப்படவில்லை ஆனால் நாமோ மெத்தடிஸ்ட்டுகள் அதை எப்படி செய்கிறார்களென்றும். பாப்டிஸ்டுகள் செய்வதையும், பிரஸ்பிடேரியன்கள் அதை எப்படி செய்கிறார்களென்றும் கவனிக்க தொடங்கினோம். நாம் மெத்தோடிஸ்டுகளோ, பாப்டிஸ்டுகளோ நாம் அல்லது பிரஸ்பிடேரியன்களோ அல்ல நாம் தேவனுடைய ஆவியினால் பிறந்த ஆவியினால் பிறந்த பெந்தெகொஸ்தேயினராவோம். அதைப் போன்ற எந்த ஒரு காரியமும் நம்மை ஒருபோதும் கட்டிப்போட வேண்டாம். ஆனால் உங்களுடைய இரகசியம் எங்கேயிருக்கின்றது என்று உலகம் கண்டுபிடிக்க தொடங்கியிருக்கின்றது. அந்த பெலத்தை உண்டுபண்ணுவது எது? இந்த மனிதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் அதை கண்டுகொண்டு அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டது என்று கூற முயற்சி செய்கின்றனர். தெய்வீககமத்தல் என்கின்ற ஒரு காரியமே இல்லை. இங்கே இந்த சத்தமிடுதல் யாவும் கர்த்தரைத் துதித்தலும், மற்றும் இந்த எல்லா அற்புதங்கள் மற்றும் அடையாளங்களும் சரியல்ல என்பர். அது ஏனென்றால் அவர்கள் தேவனை அறியவில்லை. அவர்கள் ஒருபோதும் மறுபடியும் பிறந்திருக்கவில்லை. அவர் தேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய வல்லமை மாறாதது என்று தேவனுடைய வேதம் கூறுகின்றது. அவர்கள் என்னிடம் அதைக்குறித்து சொல்வதற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கின்றனர்; நான் அதை அனுபவித்திருக்கிறேன். மேலும் நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர் இன்னும் இப்பொழுதும் தேவனாக இருக்கிறார் மற்றும் எப்போதுமே அவர் தேவனாகவே இருப்பார். அவர் பெந்தெகொஸ்தே நாளில் எப்படியாக தேவனாக இருந்தாரோ அதே 'போன்று தான் அதே விதமாக இன்றிரவு சரியாக இங்கே இந்த கட்டிடத்திலும் தேவனாக இருக்கிறார், நாம் அதே காரியத்தை, அதே ஆசிர்வாதங்களைக் கொண்டிருக் கிறோம். அவர் ஜனங்களை அதே நிலையில் ஆக்கக்கூடுமானால், அதே காரியம் ஒவ்வொரு நேரமும் செயல்படும். 22. அது ஒரு சுற்றியிருக்கின்ற சூழல் ஆகும்; அது உங்களுடைய சூழல், உங்களால் ஒரு முட்டையை எடுத்து அதை ஒரு - ஒரு - ஒரு அடைகாக்கும் கருவியின் அடியில் வைக்கமுடியும். அது சரியாக அதேபோன்று ஒரு கோழிக்குஞ்சை பொரிக்கும். ஏன்? ஏனென்றால் அந்த சுற்றுச்சூழல் தான் அந்த முட்டையை பொரிக்கச்செய்கின்றது. அது மிகச் சரியே. ஒரு பாப்டிஸ்டு அல்லது ஒரு பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கனோ, லூத்தானோ, சரியான சுற்றுச்சூழலில், அந்த ஜீவ அணுவை, அந்த தேவனுடைய வார்த்தையை, தங்களுடைய இருதயத்திற்குள் மாத்திரம் எடுத்துக்கொள்வார்களானால்... ஆனால் அவர்கள் சபை என்ன கூறுகின்றது என்பதைக் குறித்து கவலைப் படமாட்டார்கள், உலகம் என்ன கூறுகின்றது என்பதில் அவர்களுக்கு அக்கறை இல்லை. அவர்கள் அந்த காரியம் ஜீவனையடைய விரும்புகின்றனர். தேவன் அந்த பெந்தெகொஸ்தே நாளில் செய்த, அதே விதமாகத் தான் அந்த நபரை வெளியே இழுத்து பரிசுத்த ஆவியை அவன் மீது ஊற்ற நிச்சயமுடையவராயிருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனாயிருக்கிறார். ஆனால் நாம் நம்மை ஸ்தாபனங் களாக்கிக் கொண்டும், ஒருவரையொருவர் நெருக்கித் தள்ளிக்கொண்டும் மற்றும் பெலனை மறுதலித்து கொண்டும் அதை போன்ற காரியங்களால் ஒருபோதும் அதை செய்யமுடியாது. நம்மால் ஒரு போதும் அதை செய்யவே முடியாது. நான் இங்கே இந்த கிறிஸ்தவ வர்த்தகர் குழுவை விரும்புகின்ற காரணமும் அதுதான். நீங்கள் வரத்தக்கதாக இன்னுமாக ஆவியைப் பெற்றுள்ள ஒரு இடமாக உள்ளது. இப்பொழுது, நான் நான்... அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். எல்லோரும் ஒருமித்து கூடிவந்து, சொல்லப்போனால் ஒருவர் மற்றவருடைய மெல்லும் பசையை (chewing gum) சுவைக்கின்றனர், அவர்கள் - அவர்கள் முற்றிலுமான ஒரு ஐக்கியத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர், மற்றும் அவர்கள் தேவனை நேசிக்கின்றனர். அவர்களுக்கு உலகத்தின் காரியங்களிலோ, அல்லது நவநாகரிகங்களிலோ அக்கறையில்லை. இன்று நமக்கு தேவைப் படுவதெல்லாம் ஒருமித்து கூடி வருவதுதான். விலகிவிடுங்கள்; பிசாசானவன் உங்களிடமிருந்து அந்த பரிசுத்த ஆவியின் பெலத்தை திருடிச்செல்ல விட்டுவிடாதீர்கள். நமக்கு தேவையான காரியம் அதுதான். சபையினுடைய ஜீவனே அதுதான். அதை வெளியே எடுத்துப்போடுவீர்களனால் நீங்கள் ஒரு விடுதியை (lodge) மட்டுமே கொண்டிருக்கிறீர்கள். சபையிலிருந்து ஆவியை வெளியே இழுத்து எடுத்துப்போட்டால் உங்களுக்கு ஒரு ஒய்வு விடுதிதான் (lodge) எஞ்சியிருக்கும். நமக்கு ஒரு ஓய்வு விடுதி தேவை இல்லை அது ஓய்வு விடுதியை விரும்பும் மனிதர்களுக்குத்தான் வேண்டும். பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட ஒரு சபைதான் நமக்கு வேண்டும். கிறிஸ்துவே அதனுடைய ராஜாவாக இருக்கிறார். நான் சரியாக இப்பொழுது பக்தி உணர்வடைகின்றேன். ஆம். ஏனென்றால்... தேவனுக்கு ஒரு மறுபடியும் பிறந்த, நிரப்பப்பட்ட, இரத்தத்தால் கழுவப்பட்ட, ஆவியினால் நிரப்பப்பட்ட, சகல ஆக்கினைகளுக்கும் நீங்கிய, ஒரு சபை உண்டாயிருக்கும். 'ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.' 23. நீங்கள் எப்படி கிறிஸ்துவுக்குள் வருகிறீர்கள்? பரிசுத்த ஆவியினால் நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அங்குதான் இரகசியம் இருக்கின்றது. பிசாசும் கைப்பற்ற அறிந்திருக்கிறான். அவன் எப்படி உள்ளே வரவேண்டும் என்பதையும், உங்களை திருடி - உங்களிடமிருந்து அதை எப்படி திருடி வெளியே எடுக்கவேண்டும் என்பதையும் ஸ்தாபன அமைப்பை உண்டாக்கவும் அறிந்திருக்கிறான். நீ சொல்கிறாய் "இதோ பாருங்கள். நாங்கள் அந்தக் கூட்டத்திலிருந்து வித்தியாசமானவர்கள்; எங்களுக்கு ஒரு சிறந்த பிரசங்கிமார்கள் குழு உள்ளது." என்கிறாய். சிறிய வேதகல்லூரி வைட்டமின்கள் அளிக்கப்பட்டு, வேத கலாசாலையில் பிறந்த சேவலே, நீ வறுக்கும்தட்டை நோக்கி சென்று கொண்டிருக்கின்றாய் என்பது மட்டும் உனக்கு தெரியுமா? எதனால் நீ எப்படி கூவுகின்றாய்? புரிகிறதா? இன்று உங்களுக்கு தேவைப்படுகின்றது என்னவென்றால், கிறிஸ்துவுக்குள்ளே உள்ள நித்தியஜீவனை ஜனங்களுக்கு பிரசங்கிக்க அந்த நல்ல பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தான் இன்று உங்களுக்கு தேவை யாகும், ஏனென்றால் அவர் அப்பொழுது எப்படியிருந்தாரோ, சரியாக அதை விதமாகத்தான் இன்றும் ஜீவிக்கிறார். அழகான இறகுகளும், அறிவுக்கூர்மையும் என்ன நன்மையை செய்கிறது. அந்த சிறிய கோழிகள் முழுவதையும் நன்றாக உடையுடுத்தி, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதுதான், நீ வறுக்கப்படும் தட்டை நோக்கி செல்கின்றாய் என்பதை உணர்ந்து கொள்கின்றாயா? அது உனக்கு என்ன நன்மையை செய்கின்றது? உங்களுடைய சகல அறிவுக் கூர்மையினாலும் என்ன பயன்? அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து விலகி பரிசுத்த ஆவியானவரிடம் திரும்புவது தான் இன்றைக்கு நமக்குத் தேவைப்படுகின்றது. தேவனுடைய வல்லமையிடம் திரும்ப வருதல்; பழமை நாகரிகமுடைய ஜெபக்கூட்டத்திற்கு திரும்புவது. முழு இரவு கூட்டங்களுக்கும், ஜெபித்தலுக்கும், சுயத்திற்கு நாம் மரிக்கும்வரையில் தரித்திரித்தலுக்கும் திரும்புவது. அது தான் நமக்கு தேவைப்படுகிறது. உலகமாகிய தெலீலாள், பெந்தெகொஸ்தே சபையினுடைய இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டாள்: "நான் மட்டும் அவளை உயர் சமுதாய குழுபோல மிடுக்கான வளாக மாற்றி, அவளுக்கு பெரிய சபைகளை கொடுக்கக் கூடுமானால், அவளுக்கு அருமையான கலாச்சாரத்தையுடைய நேர்த்தியான பிரசங்கிமார்களை கொடுக்கக்கூடுமானால், அவளை முழுவதுமாக கட்டிப் போடுவதற்கு அதிக நோமாகாது." கிட்டத்தட்ட அதைச் செய்தும் விட்டான், அது சரி. அவன் அதைச் செய்து விட்டான். 24. என்னே, இஸ்ரவேல் அவர்கள் நிலைகொண்ட போது... அவர்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், எல்லாம் சரியாகத்தான் இருந்தது. அவர்கள் முன்னேறிச் செல்லும் வரையிலும் அது சரியாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் பாலஸ்தீனத்தை அடைந்து குடியேறி அமர்வுற்ற போது, அப்பொழுது அவர்கள் பெலிஸ்தரைப் போன்றும், புறஜாதி உலகத்தைப் போன்றும் செயல் செயல்படத் தொடங்கினர். அவர்கள் ஒரு ராஜாவை விரும்பினார்கள். மேலும் அவர்கள் சவுலை தங்களுடைய ராஜாவாக ஏற்றுக் கொண்ட போது, தேவன் தங்களுடைய ராஜா என்பதை புறக்கணித்தனர். நாம் ஸ்தாபனத்தின் பிரிவினைகளையும், கைகுலுக்குதலையும், மற்றும் மற்றும் பகட்டான காரியங்களையும் பரிசுத்த ஆவிக்கு பதிலாக ஏற்றுக்கொள்ளும் போது, பாருங்கள், அப்பொழுது நாம் தேவன் நமது ராஜா என்பதை மறுதலிக்கின்றோம். சம்பவித்தது என்ன? கடைசியாக அது அவர்களை ஒரு ஆகாபிடம் நடத்தினது. ஒரு முழுவதுமான பின்மாற்றத்திற்கு அன்றியும் அவர்களுடைய உண்மையான ராஜாவாகிய அவர் வந்தபோது அடையாளம் கண்டுகொள்ள தவறினர். சபைகள் இன்றைக்கு செய்த காரியமும் அதுதான். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக, இந்த எல்லா தத்துவங்களையும், போதனைகளையும், மனோதத்துவத்தை யும், மற்றும் - மற்றும் இந்த எல்லா வித்தியாசமான காரியங் களையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 'இப்பொழுது ராஜா சபையின் மத்தியில் இருந்தால் கூட அறியவில்லை. அதை அவர்கள் புறக்கணித்து விட்டனர், அவர்கள் அங்கே அவர்கள் இயேசுவை எவ்வாறு புறக்கணித்தார்களோ, அதே போலவே இன்று சபையும் அவரை புறக்கணித்துக் கொண்டிருக்கின்றது. ஏன்? ஏனெனில் அவர்கள் ஒரு பூமிக்குரிய ராஜாவை ஏற்றுக்கொண்டனர். 25.நீங்கள் தேவனை அறிந்த மனிதர்களுக்கு பதிலாக கல்வியறிவு பெற்ற பிரசங்கிகளை சபைகளுக்கு மேய்ப்பர்களாக ஏற்றுக் கொள்கிறீர்கள். நான் என்னுடைய குடும்பத்தை தனது சகல கல்வியறிவையும் உடையவர்களிடத்திற்கு செல்வதை விட, ஒரு பிரசங்கி தனது ஏ.பி.சியை (A,B,C) கூட அறிந்திராமல் ஆனால் கிறிஸ்துவை அறிந்திருப்பாரானால், அதைக் கேட்கவே செல்ல வைப்பேன். கல்வியைப் பெறுவதற்கு அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள், ஆனால் சபை ஒரு கல்வித் திட்டத்திற்கானதல்ல; அது வல்லமைக்கும் பரிசுத்த ஆவியின் கிரியைகளை செயலில் காண்பித்தல் என்பதற்கானது. இன்றிரவு அது தான் சபைக்கு தேவைப்படுகின்றது. அது சரியே. ஆகவே அது போன்ற காரியங்களிலிருந்து அகன்று விடுங்கள். ஆனால், தெலீலாள். முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா.... சிம்சோன் முதலாவது நின்றிருக்கவே கூடாது. தெலீலாள் அவளுடைய கண்களால் அவனை நோக்கி சரசம் செய்யத் தொடங்கினபோதே, அவன் தன்னுடைய தலையைத் திருப்பி நடந்து சென்றிருக்கவேண்டும். ஏவாள் சற்றே ஒரு நிமிடம் நின்றதின் காரணத்தால், அவள் பிரச்சனைகளுக் குள்ளானாள். ஒரு தனி நபருக்கு அல்லது சபைக்கு உலகம் எதாவதொன்றை அளிக்கும்போது, நிற்காதீர்கள்; தொடர்ந்து முன்சென்று கொண்டேயிருங்கள். இன்றிரவு சபைக்குத் தேவை என்னவென்றால், இந்த அறிவுக்கூர்மைக்கும், உயர் சமுதாய குழுபோல பகட்டான பெருமைகளுக்கும் நிற்காமல் பரிசுத்த ஆவியினால் தொடர்ந்து முன்னே செல்வதுதான். சரியாக சீராக முன்னேறி, தொடர்ந்து செல்லுங்கள்...? 26.நாம், "பாருங்கள். இப்பொழுது, எங்களுடைய ஸ்தாபனம்தான் பெரியது," என்று கூறுவோமானால், அதற்கு அதனுடன் எந்த சம்பந்தமும் இல்லை. "ஓ, அந்த நகரத்தின் மேயர் எங்களுடைய சபைக்கு தான் வருகிறார்." அப்படியிருந்தாலும் அதனுடன் ஒரு காரியமுமில்லை. யார் வருகின்றனர் என்பது ஒரு பொருட்டல்ல, கிறிஸ்து வருவதுதான் காரியம்... நாம் சபையில் இருக்க வேண்டுமென்று விரும்புவது அவரைத்தான். ஊழியம் மூலையில் நடந்தாலும், மாளிகையில் நடந்தாலும், கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அதுதான் சபையினுடைய வீடாக ஜனங்களுடைய வீடாக இருக்க வேண்டும். ஆனால் தெலீலாள் கொஞ்சம் - கொஞ்சம் கடுமையான சூழ்ச்சியை செய்ய மிகவும் நளினமாக, நேர்த்தியாக காரியத்தை வேண்டியிருந்தது. ஏனென்றால்' ஏனென்றால் அவள் சிம்சோனை நிறுத்த வேண்டியிருந்தது. அவன் ஒரு தேவனுடைய பராக்கிரமசாலியாக இருந்தான் என்றும், அவனுக்குள் ஒரு மறைவான பெலன் இருந்ததென்றும் அவள் அவள் அறிந்திருந்தாள். இப்பொழுது, அவள் ஏதாவது ஒன்றைச் செய்து அவனை நிறுத்த முயலும்படி எல்லாவித நளினத்தையும் கைக்கொண்டு நயம்பண்ணுதலையும் செய்ய வேண்டியிருந்தது. பாருங்கள், அதுதான் உலகம் சபைக்கு செய்திருக்கின்றது. சகலவித நளினங்களையும் நேர்த்தியாக காரியங்களையும் சூழ்ச்சிகளையும் செய்துவிட்டது. உன்னால் இதைச் செய்ய முடியும் அல்லது உன்னால் இங்கே இன்னும் சிறப்பாக இருக்க முடியும்... உன்னால் இதை, அதை மற்றவைகளை செய்ய முடியும் என்று கூறி சபையை எறக்குறைய மரித்துப்போகும் வரையிலும் செய்துவிட்டது. நமக்கு, முன்பு உண்டாயிருந்ததைப் போல ஜெபக்கூட்டங்கள் இப்பொழுது இல்லை. இன்று ஜனங்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். பில்லி கிரஹாம் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ், நான், நாங்கள் எல்லோரும் நாங்கள் நம்முடைய நாளில் ஒரு எழுப்புதலை குறித்து பேச முயன்று கொண்டிருக்கிறோம். சபையானது உலகத்துடன் கட்டப்பட்டிருக்கின்ற வரையில் நாம் எவ்வாறு ஒரு எழுப்புதலை கொண்டிருக்க முடியும்? சிம்சோன் கட்டப்பட்டவனாயிருக்கும் போது உங்களால் அதை எப்படி செய்ய முடியும்? இரகசியமானது அறிந்து கொள்ளப்பட்டு விட்டது. மேலும் தேவன் அவனுடைய பலத்தை சிரைத்துப்போட்டார். அதன்பின் அது இல்லை.... அது ஜனங்களை ஒரு இடத்தை அடையச் செய்து விட்டது. இந்த அடைகாக்கும் கருவியினால் உற்பத்தி செய்யப்பட்ட பிரசங்கிமார்கள் நாம் நாம் மிகவும் வணங்காக்கழுத்துள்ள வர்களாகி விடும் ஒரு நிலை வரைக்குமாக நம்மை கொண்டுவந்து விட்டனர். நேர்மையான ஜனங்களும் கூட ஜெயம் கிடைக்குமட்டும் ஜெபிக்கின்ற சில நல்ல பண்டைய பரிசுத்தவான்களை கேலி செய்யும் அளவிற்கு யாராவது சத்தமிடுவதை கேட்கும்போது; அல்லது ஒருவர் அந்நியபாஷைகளில் பேசும் போதோ, அல்லது பரிசுத்த பெலனை செயலில் ஆவியின் காண்பித்து உறுதிபடுத்தும் போதோ, அப்போது, தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் அந்த ஜனங்கள், அப்படிப்பட்ட மக்களை கேலி செய்வார்கள். காரியம் என்ன? அது... அந்த எல்லாக் காரியங்களும் என்ன செய்ததென்றால், பலத்தை சிரைத்துப் போட்டதுதான். 27. லூத்தரன் காலத்தில் சம்பவித்தது அதுதான். லூத்தர் சரியாகத்தான் இருந்தார், ஆனால் அவர்கள் ஒரு புதிய பள்ளிக்கூட கலாசாலையை உண்டாக்கினர். அது லூத்தர் எதைப் பற்றிப் பேசினாரோ, சரியாக அந்த காரியங்களை சிரைத்துப் போடத் தொடங்கினது. புரிகிறதா? சிரைத்துப்போடுதல்... வெஸ்லியின் நாட்களிலும் அதேதான் நடந்தது: தெய்வீக சுகமளித்தல், பலவித அற்புத அடையாளங்கள் போன்றவற்றை உடையதாயிருந்தது; பரிசுத்தமாக்குதலைப் பிரசங்கித்தார். ஆனால் புதிய குழுக்கள் உள்ளே வந்தபோதோ, அவர்கள் அந்த ஜடையை கண்டுபிடித்து, சிரைத்துப்போட்டனர் (பாருங்கள்?). இந்த கடைசி நாட்களில் பெந்தெகொஸ்தே சபையில் உள்ள பரிசுத்த ஆவியை குறித்தும் அதே காரியம்தான், அது ஜடைகளை சிரைக்கத் தொடங்கிவிட்டது. அந்த இரகசியம்: இடத்தை கண்டுபிடித்து, ஜெபக்கூட்டங்களை நிறுத்துதல். நான் ஒரு பெந்தெகொஸ்தே சபையை அறிவேன், (நான் எற்கெனவே அங்கு சென்றிருந்ததால், அந்த சபையிலுள்ள ஒருவரிடம் சற்று பேசிக்கொண்டிருந்தேன்), அந்த பெந்தெகொஸ்தே சபையினர் ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பதற்காக புதன்கிழமை பதினைந்து நிமிடங்கள் விரைவாகவே சென்றுவிட அனுமதிக்கின்றனர். எதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்பதற்காக, அவர்கள் எல்லோரும் கீழறைக்கு செல்கின்றனர். 28. ஒரு ஊழியக்காரர் மற்றொரு நாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், அவர் ஒரு நபருடன் இரவு உணவு உண்ண சென்றிருந்தாராம். அவர்களுடைய இரவு உணவு தயாராகிக் கொண்டிருக்கையில், இந்த ஊழியக்காரரின் மனைவி "நாங்கள் சூசியை நேசிக்கிறோம்" (தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சி தமிழாக்கியோன்) அல்லது அதுபோன்ற ஏதோவொன்றை பார்ப்பதற்காக, அவர்களுக்கு இரவு உணவு சமைப்பதற்கு கூட முன்னதாக சென்றுவிட்டாள். சகோதரனே, நான் உங்களுக்கு கூறுகிறேன் அத்தகைய காரியங்கள் வருமானால், அது எவ்வாறுள்ளதென காண்பிக்கிறது... நாம் சிறுவர், இளம் குடும்ப ஜீவியம் குற்றவாளிகளை கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இரகசியமானது கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அது ஜனங்களிடமிருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை வெளியே எடுத்துப் போட்டது. மேலும் அவர்கள் அவர்கள் தேவனிடம் திரும்பி வருவதற்கு பதிலாக, உலகத்தின் காரியங்களுக்காக செல்கின்றனர். சற்று நில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் கர்த்தருடைய வருகை மிக அருகில் இருக்கின்றது. நம்முடைய அறிவு என்ன நன்மையை செய்யும்? நம்முடைய பெரிய கட்டிடங்கள் என்ன நன்மையை உண்டாக்கும்? நம்முடைய புத்தி கூர்மையான சம்பாஷணைகள் என்ன செய்யும்? அது எடுத்துக்கொள்ளும்... அந்நாளில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை தவிர வேறு எதுவுமே நிற்காது, கழுவப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் அவருடைய அவருடைய இரத்தத்தால் நீதியினால் வஸ்திரம் தரிக்கப்படுதல் தான் நிற்கும். சபை அதை இழக்குமானால், அது இழக்கப்பட்ட நிலையை அடைந்து விடும். அது தாமே செயல்படாமல் கீழடங்கி, நயமாக வசம் பண்ணிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதை நீங்கள் காண முடியும்... நம்முடைய கோட்பாடுகளினாலும், ஸ்தாபன கொள்கைகளினாலும், மார்க்கபேத பிரிவினைகளாலும், நம் உயர்தர பகட்டான மற்றும் பளபளப்பான காரியங்களாலும், பரிசுத்த ஆவியானவர் துக்கப்படுகின்றார். அவைகள் யாவும் தேவனுடைய பார்வைக்கு அருவருப்பானவைகள் என்று உங்களுக்குத் தெரியுமா? நமக்கு தேவைப்படுவது என்னவென்றால் ஒரு நல்ல சுத்தமான, கழுவப்பட்ட, நூறு சதவீதம் தேவனிடமிருந்து வெளியே எடுக்கப்பட்ட, எந்த ஒரு அவமானமோ, பின் மாற்றமோ இல்லாத ஒரு சபைதான். என்ன கூறுகின்றது என்பதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை: நாம் தேவனை உடையவர்களா இருக்கிறோம். நம்முடைய அக்கறை எல்லாம் அவரை குறித்துதான், அன்றியும் நம்முடைய நம்முடைய இருதயங்களில் இருக்கிறார். நாம் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ளுகிறோம். அதைத் தான் தேவன் அவருடைய சபையில் விரும்புகின்றார். 29. தெலீலாளிற்கு ஒரு கடினமான பிரயாசை உண்டா யிருந்தது. அவனுக்கு ஒரு காரியத்தை காண்பித்தாள், பிறகு மற்றொரு காரியத்தை காண்பித்தாள், பின்பு வேறொன்றையும் காண்பித்தாள். அவன் கடைசியில் அவளுக்காக விழுந்து போகும்படியான நிலைக்கு வரும் வரைக்குமாக அப்படி செய்து கொண்டிருந்தாள். சபையும் உலத்தின் காரியங்களுக்காக விழுந்து போயிருக்கின்றது. மேலும் முதல் காரியமானது என்னவென்று உங்களுக்கு தெரியும், அது எவ்வித நிலையை அடைந்துள்ளதென்றால், தெய்வீக சுகமளித்தலானது சபையிலிருந்து வெளியே சென்று முடிந்து விட்டது என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. அவருடைய உயிர்த்தெழுதலின் அத்தாட்சி அத்தாட்சியாகிய கர்த்தர் எனக்கு அருளின அந்த சிறு வரத்தோடும் மற்றும் ஆவியைப் பகுத்தறிதலுடனும், நான் கூட்டங்களுக்கு செல்கின்றேன்... மேலும் அக்காரியங்கள் நிகழும்போது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு, "ஆஹ்... நான் யூகிக்கிறேன். அதெல்லாம் சரிதான்..." என்று கூறுவதைக் கண்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியின் வல்லமை அவ்விதமாக அசைவாடிக்கொண்டிருக்கையில், மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவன், உலகத்தின் காரியங்களால் மிகவும் மரித்துப்போய் அவ்வாறு உட்கார்ந்திருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கக் கூடுமா? பாவிகள் தேவனுடன் சரிசெய்து கொள்ளுமாறு பீடத்தண்டை வரத்தொடங்குவார்கள், கிறிஸ்தவர்களோ, அவர்களைப் பார்த்தவாறு மெல்லும் பசையை வாயில் போட்டு மென்றுக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அதுதான் உண்மை. முந்தைய காலத்தில் எவ்வாறு இருக்குமென்றால் அந்த பாப்டிஸ்டு சபையில், கீழே அங்கேயிருக்கின்ற அந்த பழைய கெண்டக்கி பாப்டிஸ்டு சபையில், அங்கிருந்து தான் நானும் வந்தேன்... ஏன், ஒரு பழைய பாவியான சிறுவன் பீடத்தண்டை வருகையில், அங்கே சுற்றியிருக்கும் ஒவ்வொரு தாயாரும், அவனுடைய கழுத்தை கட்டிக்கொள்வர். அவன் பலிபீடத்தை அடையும் முன் அவர்களினூடாகத்தான் வருவான். காரியம் என்ன? அவர்கள் அந்த இரகசியத்தை சிரைத்துப்போட்டனர். அவர்கள் ஜெப ஜீவியத்திலிருந்து விலகி விட்டனர்; அவர்கள் பரிசுத்த ஆவியிடமிருந்து விலகி விட்டார்கள். 30. கூவிக்கொண்டிருக்கும் சேவல்களும், கேனரி குருவி மூளையையுடைய கல்வி கற்ற குருவிகளும், தேவனைப் பற்றி உள்ளும் புறமுமாக உங்களுக்கு விளக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கும்போது அவரை அறிந்துகொள்கிறீர்கள். நீங்கள் எப்போதுமே அவரை அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி அதுவே. தேவன் இப்பொழுதும் தேவனாகயிருக்கிறார். அவர் முன்பு எப்போதும் எவ்வாறு இருந்தாரோ இன்றைக்கும் அதே விதமாகத்தான் இருக்கிறார். அவர் எலியாவுடன் அந்த மலையிலிருந்த அதே தேவனாயிருக்கிறார். அவர் தானியேலுடன் கெபியில் இருந்த அதே தேவனாக இருக்கிறார். அவர் சரியாக அவ்வளவு...... அவர் பெந்தெகொஸ்தேயின் தேவனாக இருக்கிறார். அவர் சபையினுடைய ஒரு தேவனாக இருக்கிறார். ஆகையால், இன்றிரவு நாம் செய்யவேண்டியது என்னவென்றால், நம்முடைய எல்லா பகட்டான மற்றும் மற்றும் பளபளப்பான காரியங்களை விட்டுவிட்டு தேவனிடம் திரும்புவதுதான். பரிசுத்த ஆவியிடத்திற்கு திரும்புதல். கடந்த இரவு இங்கே உங்களுக்கு உண்டாயிருந்தது போல முழு இரவு ஜெபக்கூட்டங்களுக்கு திரும்புதல். 31. இது வெட்டுகின்றது என்பது எனக்குத் தெரியும். அது சற்று கடினமானது தான். இதைச் செய்ய விரும்பவில்லை. நீங்கள் உங்களுடைய ஜனம்... பெந்தெகொஸ்தே டாலர்கள் என்னுடைய பிள்ளைகளுக்கு உணவு அளிக்கின்றது. பெந்தெகொஸ்தே டாலர்கள் தான் என்னை உலகைச்சுற்றிலும் பிரசங்கிக்க கொண்டுசென்று அஞ்ஞானிகளுக்கு செய்கின்றது. நான் உங்களை நேசிக்கிறேன், ஆனால் அதனால் தான் நான் உங்களை கடிந்துகொண்டும், நான் செய்கின்ற விதமாக முன்னேறி செல்கிறேன். நான் நான் உலகம் உள்ளே வருகின்றதை காண்கிறேன். நான் பக்தி வைராக்கியமுடைய வனாயிருக்கிறேன். என் மனைவி வேறொரு மனிதனுடன் சரசம் செய்வதை நான் காண்பேனானால், நான் அவளிடத்தில் துரிதமாக செல்வதை நீங்கள் காண்பீர்கள். அது சரி. அது ஏனென்றால் நான் அவளை நேசிக்கிறேன். ஆகவே சபையானது உலகத்துடன் சரசமாடுவதை நான் காணும் போதும், அது எனக்குள் ஏதோவொன்றை எழுப்புகின்றது; என்னால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது. நான் ஏதாவது ஒன்றை கூற வேண்டும். நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் நான் அதை வெளியேற்றித்தான் ஆக வேண்டும். நான் சபைக்காக எரிச்சலுடையவனாக இருக்கிறேன். அவள் உலகத்துடன் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. உலகத்துடன் எப்போதாவது சிக்கிக் கொள்வது அவளுக்கு தூரமாயிருப்பதாக, அவள் சந்தில் உள்ள தகரத்தால் செய்யப்பட்ட ஒரு குறுகலான இடத்தில் நின்று ஆராதிக்க வேண்டியிருந்தாலும் கூட, அவள் சுயாதீனமுடையவளாய் இருப்பதாக. அவள் ஆவியில் சுயாதீனமுடையவளாய் இருக்கும் வரை, அவளை விட்டு விடுங்கள். அவளுக்கு வேத கல்லூரிகளோ, அல்லது கல்லறை களோ, அல்லது அதனுடன் செல்லும் எந்த காரியமோ தேவையில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் ஒரு புதுப்பித்தலும் தான் அவளுக்கு தேவையாகும். தாவீது, சபை "என்னுடைய இரட்சிப்பை புதுப்பியும், இரட்சணியத்தின் சந்தோஷத்தை எனக்கு திரும்பத் தாரும்" என்றான். அதை இழந்து கொண்டிருக்கிறது. அது மிக மோசமானது. ஆனால் எப்படியாயினும் அவர்கள் அதைச் செய்கின்றனர். மேலும் அதன் பின்னர், தேவனுடைய வல்லமை சபையை அசைப்பதில்லை; அது அவர்களுக்கு சற்றே மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அவர்கள் சுற்றிலும் சென்று. "பாருங்கள், அது சற்று நன்றாகத்தான் இருந்தது. ஹா என்று கூறி அத்துடன் முடித்து விடுகின்றனர். என்னே, அது நம்மை மனந்திரும்பும் படிக்கு, நம்மையே முழங்கால் இடும்படி செய்ய வேண்டும். அது கண்ணீர்த்துளிகளை வரச்செய்ய வேண்டும். அது இரட்சிப்பைக் கொண்டுவர அல்லது - மற்றும் ஆத்துமாவை ஜெயிக்கவேண்டும். அது நிச்சயமாக... நாம் ஒவ்வொரு தெருமூலையிலும் நின்று யாரிடமாவது கூற முயற்சித்து கொண்டிருக்கும்படி கர்த்தருடைய வருகையானது நம்மை அவ்வளவு கடுமையாக நெருக்க வேண்டும். அதைக்குறித்து ஏதாவதொன்றைச் செய்யுங்கள். சிறிது கழித்து, அது மிகவும் தாமதமாகியிருக்கும். 32. நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. எப்போது நான் - நான் இதைக் கூறி முடித்து விடுகிறேன்: நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. கட்டிப்போட்டிருந்தபோது, அங்கே ஒரு புதிய ஜடைமுடி அவர்கள் சிம்சோனை வளர்ந்தது. அந்த பெலிஸ்தரை அவர்கள் முன்பு ஒருபோதும் அசைக்கப்பட்டிராத அளவிற்கு அசைக்கத்தக்கதாய், இங்கே எங்கோவோரிடத்தில் அவர் ஒரு புதிய ஜடை முடியை வளரச் செய்யுமாறு நான் தேவனிடம் ஜெபிக்கின்றேன். தேவன் அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் அதை சபையின் மூலம் செய்யவில்லையெனில், அவர் ஒரு கிறிஸ்தவ வர்த்தகனை எடுத்துக் கொள்வார். அவர் வேறு ஏதாவதொன்றை வைத்து செய்வார். ஆனால் வல்லமையின் ஒரு ஜடை உண்டாகும். பரிசுத்த ஆவியின் இரகசியமான பெலன் மீண்டும் முளைக்கும், எந்த ஒன்றையும் போல நிச்சயமாகவே அது தன்னுடைய கிரியைகளை கடைசி நாட்களில் செய்யும். தேவனே அந்த ஜடை முடி வெளிவரும் போது நாங்கள் அதனுடன் எண்ணப் பட்டிருக்குமாறு அருளுவீராக. நாம் ஜெபிப்போம். 33. ஜெபம் செய்வதற்கு முன்பாக, உங்களுடைய தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கும்போது, உங்களுடைய சகோதரனாக, உங்களை நேசிக்கும் ஒருவனாக இந்த கேள்வியை கேட்சு விரும்புகின்றேன் உங்களை வந்து தட்டிக் கொடுப்பதற்காக அல்லாமல், ஆனால் நீங்கள் தேவனுடன் சரியாக இருப்பதை உறுதிசெய்வதற்காக மட்டுமே இந்த காரியங்களை கூறுகின்றேன். எத்தனை பேர் தாங்கள் முன்பு ஒரு விசை கொண்டிருந்த அந்த - ஒரு அனுபவத்தை, பரிசுத்த ஆவியின் ஒரு புதுப்பித்தல் வேண்டும் என்று விரும்புகிறீர்கள், "சகோதரன் பிரன்ஹாம், தேவன் என்னுடைய பலத்தை புதுப்பிக்கும்படி, எனக்காக இப்பொழுது ஜெபியுங்கள்" என்று கேட்கிறீர்களா? தேவன் ஆசீர்வதிப்பாராக. எல்லாவிடங்களிலும் உங்கள் கரங்களை காண்கிறேன். "தேவனே என்னுடைய பலத்தை புதுப்பியும்."ஓ எவ்வளவு அற்புதமாயுள்ளது. "கல்வாரிக்கு என்னை திரும்ப எடுத்துச்செல்லும். இந்த உலகத்தினுடைய சகல காரியங்களையும் நான் விட்டுவிடட்டும். எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பற்றிக்கொள்ளட்டும்." எவனாகிலும் தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால்... அது ஒரு தியாகத்தின் நடையாகும். அது நீங்கள் உலகத்துடன் ஒப்புமைபடுத்திக்கொள்ளாமலிருக்கும் ஒரு நடத்தல். கிறிஸ்துவே முன்மாதிரியாயிருக்கிறார். அனுதினமும் மரித்து, கிறிஸ்துவை கிறிஸ்துவே உங்களுக்கு பின்பற்றி நடவுங்கள். ஓ. அவர் உங்களுக்கு அருளுவாராக. என் விலையேறப்பெற்ற சினேகிதனே. 34. ஓ... இப்பொழுது நீங்கள் தாழ்த்தியிருக்கும் போது, உங்களுக்கு உங்கள் தலைகளைத் என்பதில் உங்களுடைய சிந்தையை வையுங்கள். "தேவனே, போது, உங்களுக்கு என்ன தேவை என்னைத் திரும்ப எடுத்துக்கொள்ளும். அதற்கு என்ன விலை கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு அக்கறை இல்லை. அதை என்னவாயிருந்தாலும் எனக்கு கவலையில்லை. நான் உலகத்துடன் இனி ஒருபோதும் சரசம் செய்ய விரும்பவில்லை. நான்- நான் அசலாயிருக்கவே விரும்புகிறேன்." என்று கூறுங்கள். சபை மாத்திரம் தேவனோடு எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறு முன்செல்லுமானால், எந்தவொரு முடமானவர்களோ, வியாகுலங்களோ நம்மிடையே இராது. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும். நாம் அதை செய்ய வேண்டும்...."நம்முடைய பாவங்கள்," என்றா நீர் கூறுகின்றீர், "நல்லது, நான் எந்த தவறும் செய்வதில்லை. நான் - நான் மது அருந்துவதில்லை, நான்..." அது அதுவல்ல; சிலவேளைகளில் அசட்டை செய்வதாக இருக்கின்றது, அது தேவனோடு சஞ்சரிக்காமல் இருத்தல், அது ஒரு ஆவியில் இயங்காமல் இருப்பது, அது தேவன் தனக்கு பரிசுத்த அளித்திருக்கும் காரியத்திற்கு தண்ணீர் ஊற்றாமல்... ஊற்றாமல் இருப்பது. நீங்கள் அதை துக்கப்படுத்தி அனுப்பிவிடுகின்றீர்கள். ஒரு ஸ்திரீ கடந்த இரவு என்னிடம் வந்து கூறினாள்; அவள் "சகோதரன் பிரன்ஹாம், நான் சுகவீனமாயிருக்கின்றேன்," என்றாள், நான் மிகவும் "எனக்கு என்னுடைய ஜெபத்தில் மேற்கொண்டு எந்த என்றாள், அவள் கூறினாள், வல்லமையும் இல்லை, நான் என்னுடைய ஜெப ஜீவியம் என்னைவிட்டு போய்விட்டது,", அவள், "மேலும் எனக்கு வயதாகிக் கொண்டிருக்கின்றது, நான் - நான் இவ்விதமாகவே செல்ல விரும்பவில்லை." என்றாள். பாருங்கள்? ஆவியை உங்களிடமிருந்து துக்கப்படுத்தி விலகச்செய்தல். அவர் சரியாக இப்பொழுதே உங்களிடம் வருவாராக. 35. கர்த்தராகிய இயேசுவே, வார்த்தையானது இருபுறமும் கருக்கான பட்டயத்தைப் போகிறதையும் போல, வருகிறதையும் வெட்டுகிறதாயிருப்பதால், கடினமாக இருந்தாலும், இந்த ஒரு கூட்ட ஜனங்களை உம்மிடத்திலே கொண்டு வருகிறேன். ஆனாலும், கர்த்தாவே, அந்த காரியங்கள் தான் எங்களை நாங்களாக்குகின்றது. பரிசுத்த ஆவி தான் எங்களை விருத்தசேதனம் செய்து, உலகத்தின் மாம்சத்தையும் வெட்டி அகற்றி, எங்களுக்கு புதிய ஜீவனை அளிக்கின்றது. அது - அது இந்த பிறப்பில், எல்லா கர்த்தாவே, நிலத்தில் விழுந்திருக்கின்ற ஒரு விதையைப் போன்று, அந்த விதையானது செத்து அழுகாவிட்டால் அது அழகும் போதோ, அப்பொழுது புதிய ஜீவன் வெளியே கிறிஸ்துவைப் பற்றின எங்களுடைய வருகின்றது. அறிவுப்பூர்வமான மன எண்ணங்கள் அவ்விதமாக மிகவுமாய் மரித்துப்போகையில், அப்பொழுது புதிய ஜீவனானது பிறக்கும். மரிக்கும் பொழுது மாத்திரமே புதிய ஜீவன் வரமுடியும். மரணமும் ஜீவனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது. மேலும், பிதாவே புது விதையானது நிலத்தினுள் செல்லும், அந்த மஞ்சள் விதையானது கடினமானதாகவும், விரைப்பாகவும் எவ்வித மாற்றமும் இன்றி இருப்பதை நாங்கள் உணருகின்றோம். அது மரித்து அழுகும்போதோ ஒரு சிறிய பச்சை இலை வெளிவருகின்றது. அது கீழே எப்படி சென்றதோ, ஒரு விதத்திலும் அதைப்போன்றே இருப்பதில்லை. ஆனால் அது மேலே வரும்போது அது நெகிழ்வானதாகிவிடுகின்றது. காற்று வீசும்போது அது மிருதுவானதாயிருக்கின்றது. அது ஒரு புதிய ஜீவன் ஆகும்; அது வித்தியாசமான நிறத்தையுடையது, அப்படியே ஒரு கடினமான இருதயத்தையுடைய சபை அங்கத்தினர் ஒருவர், அந்த சிலுவையின் அடியில் விழும்போதும், தன்னுடைய சுய அறிவுப்பூர்வமான சிந்தனைகளுக்கு அழுகிப்போகிறான். ஆனால் அந்த நிலையிலிருந்து ஒரு புது ஜீவன் வெளிவரும்போதோ, அவன் முழுவதுமாகவே வித்தியாசமான ஒருவனாக வெளியே வருகிறான். அவன் ஜீவனையுடையவனாயிருக்கிறான். அவன் வளருகின்றான்; அவன் வார்த்தைக்கும் ஆவிக்கும் வளைந்து கொடுக்கிறவனாயி ருக்கிறான். ஆவியானவர் காற்றைப்போல அவன் மீது வீசும்போது கடினமாகவும், விரைப்பாகவும் முன்பிருந்த அவன், ஆவியானவருக்கு அசைகின்றான். 36. தேவனே, இன்றிரவு அதை அருளும், தங்கள் கைகளை உயர்த்திய ஒவ்வொரு நபருக்கும் பரிசுத்த ஆவியானவர் புதிய ஜீவனை சிருஷ்டிப்பாராக, கர்த்தாவே எங்கள் எல்லோரையும், நாங்கள் எங்கள் சுயத்திற்கு மரிக்கின்ற வேளையிலே, நாங்கள், பெந்தெகொஸ்தே விசுவாசத்தையுடையவர்கள் என்று உரிமை கோருகையில், ஒரு பெந்தெகொஸ்தே அனுபவம் எங்கள்மேல் வலிமையாய் விழுவதாக எங்களுடைய சுயசிந்தனையானது மரித்துப்போவதாக, மேலும் பரிசுத்த ஆவியானவர் எங்களை எடுத்துக்கொண்டு, தேவன் நாங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ, அவ்விதமாக உருவாக்கும். எங்களுக்குள்ளே. கர்த்தாவே, ஒரு வாஞ்சையை, ஒரு பக்திவைராக்கியத்தை உருவாக்கும், கர்த்தாவே, சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும், பிரசங்கம் செய்வதற்கும் சாட்சி அறிவிக்கவும், இரவும் பகலும் தொடர்ந்து செல்லத்தக்கதாக ஏதாவதொன்றை செய்யவும் ஒரு - ஒரு பக்திவைராக்கியத்தை உருவாக்கும். ஏனெனில் நாங்கள் நினைப்பதைவிட காலதாமதமாகிவிட்டது. சீக்கிரமாகவே, இயேசு வருவார். அவர் வரவில்லை யென்றால், நம்முடைய ஜீவியம் விரைவில் முடிந்துவிடும். பின்பு நித்தியகாலமாக, நாம் ஏன் இன்னும் அதிகமாக செய்யவில்லை என்றும், நாம் உட்கார்ந்து கொண்டு, சோம்பலாக கிடந்திருந்த அந்த மணிநேரங்களை ஏன் நிரப்பப்பட்டு, எழுந்துசென்று செலவிடவில்லை? நாம் ஏன் வெளியேசென்று அதைக் குறித்து ஏதாவதொன்றை செய்யாமலிருந்தோம்? என்றும் வியந்து கொண்டிருப்போம். தேவனே, வருகின்ற இரவிலும் இந்த கூட்டம் பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படும்படி அருள்புரிவீராக. கர்த்தாவே, இங்கிருக்கும் ஒவ்வொரு நபரும், இவர்களுக்கு ஏதாவதொன்று சம்பவிக்கும் வரைக்கும் இந்த விசேஷித்த கூட்டங்களை விட்டு செல்லாதிருக்கத்தக்கதாக அனுகிரகஞ்செய்வீராக. இந்த இரண்டு அல்லது மூன்று இரவு பிரசங்கபாகங்களில் விதைக்கப்பட்ட அந்த விதையானது. தேவனிடத்திலிருந்து வருகின்ற அடையாளங்களாலும், அற்புதங்களாலும், தண்ணீர் பாய்ச்சப்படுவதாக, மற்றும் புருஷர்களும் ஸ்திரீகளும் அதிசயங்களாலும் புதுப்பிக்கப்பட்ட ஜீவனோடு எழும்பும் வரையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் புதுப்பிப்பீராக. பழைய நிலையிலேயே இருப்பவர்கள், புதிய நம்பிக்கையை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவுக்குள் முன்னேறிச்சென்று அவர் மீண்டும் வரும்படியாக அந்த கிரியைகளைச் செய்து முடிப்பார்களாக. கர்த்தாவே இதை அருளும், எனென்றால் இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2